தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வகையில் சாப்ட்வேர் என்ஜினீயர் பணி வாய்ப்பு!

08:27 AM Apr 28, 2024 IST | admin
Advertisement

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வகையில் சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Advertisement

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தற்போது வெளியாகி உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இளங்கலை, முதுகலை பிரிவில் டிகிரி அல்லது என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் டெக்னீக்கல் என்ஜினீயரிங் பிரிவில் சி, சி , ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் கோடிங் லேங்குவேசுடன் ஓராண்டுக்கு மேலான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Advertisement

அதுமட்டுமின்றி NoSQL Database-ல் மாங்கோடிபி (MongoDB), கேசன்ட்ரா (Cassandra), ரெடிஸ் (Redis)-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ரெஸ்ட்ஃபுல் ஏபிஐஎஸ், மைக்ரோசர்வீசஸ், டிஸ்ட்ரிபூட்டட் சிஸ்டம்ஸ், டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ், சிஸ்டம்ஸ் ப்ரோகிராமிங், நெட்வொர்க்கிங் தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதை அறிவிப்பின்படி எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் முடிந்த வரை விரைவில் விண்ணப்பம் செய்வது சிறந்தது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ‛வொர்க் ப்ரம் ஹோம்' முறையில் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். ஆண்டு சம்பளமாக அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய 👇

ஆந்தை வழிகாட்டி / வேலைவாய்ப்பு

Tags :
job opportunityMicrosoft SoftwareSoftware Engineerwork from home
Advertisement
Next Article