தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஸ்மோக் பிஸ்கட்: ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை!.

02:13 PM Apr 24, 2024 IST | admin
Advertisement

வ்வப்போது பல புதிய வகை உணவு பொருட்கள் டிரெண்டிங் ஆகும் நிலையில் ஒரு சில பொருட்கள் மக்களின் உயிருக்கு ஆபத்தாகவும் அமைந்துவிடும் சூழலும் இருந்து வருகிறது. சமீபத்தில் நாடு முழுவதும் பல பகுதிகளில் ஷவர்மா சாப்பிட்டு குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் ஷவர்மா கடைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பல்வேறு இறைச்சி கடைகளிலும் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது. இறைச்சிகளை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்படுவது தொடர்பாகவும் அந்தந்த ஓட்டல்களில் ஆய்வானது நடத்தப்படுகிறது. அதுபோல சமீபத்தில் பஞ்சு மிட்டாயில் ரோஸ் நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்பட்டது. அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட்டும் தற்போது சர்ச்சைக்குள்ளானதை அடுத்து இந்நிலையில், இந்த திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருளான Smoking Biscuit-ஐ குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

ஸ்மோக்கிங் பிஸ்கட் என்றால்?

Advertisement

ஒரு சிலிண்டரில் இருந்து திரவ நைட்ரஜன் எடுக்கப்பட்டு அதனை பிஸ்கட்டில் சேர்த்தால் அதிலிருந்து புகை வரும். அதனை அப்படியே வாயில் போட்டுக்கொண்டால், அப்போதும் வாய் மற்றும் மூக்கில் புகை வரும். குழந்தைகளுக்கு Fun-ஆக தோன்றும் இந்த ஸ்மோக்கிங் பிஸ்கட், சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடக்கும் விழாக்களிலும் விற்கப்படுகிறது.

அதாவதுதிரவ நிலையில் கிட்டத்தட்ட மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன், ஸ்மோக்கிங் பிஸ்கட்டில் பயன்படுத்தப்படுவதே இதை பருகும் அல்லது உண்ணுவோருக்கு ஆபத்துக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்களை உறையவைக்க 1800-களில் இருந்தே உலகம் முழுவதும் திரவ நைட்ரஜன் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குளிர்பானங்கள், இனிப்புகள், ஐஸ்க்ரீம்கள் உள்ளிட்டவற்றிலும் உணவு பேக்கேஜிங் தொழில்நுட்பத்திலும் Liquid Nitrogen உபயோகப்படுத்தப்படும். கோழி, மீன், பால், பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பாஸ்தா, பேக்கரி பொருட்கள் உள்ளிட்டவற்றை குளுமையாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

அப்படி உணவுப்பொருட்களை பாதுகாக்க திரவ நைட்ரஜன் எந்தளவுக்கு நன்மையோ, அதே அளவு ஆபத்தும் நிறைந்தது. அதாவது, திரவ நைட்ரஜன் ஒரு நொடியில் எதையும் உறைய வைக்கும் தன்மை கொண்டிருக்கும் நிலையில், அதன் நீராவி தோல் திசுக்களையும் உறைய வைக்கும் இயல்பு கொண்டது. ஆக அதனை சிறிது விழுங்கினாலும் வயிற்றில் Liquid Nitrogen evoparation நடந்து, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்தி மரணத்துக்கே வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவு பேக்கேஜிங் துறையில் பயன்படுத்தப்படும் திரவ நைட்ரஜன், உணவுப்பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுவது பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், குறைந்த அளவில் கவனமாக பயன்படுத்தப்படும்போது, திரவ நைட்ரஜனால் எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம்.இத்தகைய திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறைபனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது. திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கிறது.

மேலும் ஆய்வு கூடங்களில் பொருட்களை குளிர்ச்சியான சூழலில் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இந்த திரவ நைட்ரஜன் அரை வெப்ப நிலையில் வாயுவாக மாறும் தன்மை கொண்டது. இவற்றை கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஸ்மோக்கிங் பிஸ்கட், ஸ்மோக்கிங் பீடா போன்ற பெயர்களில் சாப்பிடும் பொருட்களாக விற்பனை செய்கின்றனர். liquid nitrogen தேவைப்படும் இடத்தில் மட்டுமே, பயன்படுத்த வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறி பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
dangerFood Safety DepartmentLiquid NitrogenSmoke BiscuitsWarns
Advertisement
Next Article