அறுபதாவது அமெரிக்க தேர்தல் கவுண்ட் டவுன் - 3
உலகத்தின் பெரிய வல்லரசு என்று நூறாண்டுகளுக்கு மேல் மார் தட்டி கொள்ளும் அமெரிக்க தேர்தலை முழுவதுமாக மூன்று பாகங்களாக பார்ப்போம்.
அமெரிக்க தேர்தல் மிகவும் வித்தியாசமானது. ஒவ்வொரு நான்கு வருடத்திற்கு ஒரு முறை லீப் வருஷத்தில் நவம்பரில் முதல் செவ்வாய் அன்று வரும். இது இன்று நேற்றல்ல 1845 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தான் வினோதமா? என்று கேட்பவர்களுக்கு இன்னும் பல தகவல்களை பார்க்கப்போகிறோம். நவம்பர் நான்காம் தேதி தேர்தல் நடந்தால் எப்போது இதன் ரிசல்ட்டை அறிவிப்பார்கள் என கேட்டால் அது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தான் இருக்கும். என்னடா இது 2024 நவம்பர் மத தேர்தலின் அறிவிப்பு 2025 ஜனவரி தான் ரிசல்ட்டை வெளியிடுகின்றனர் என்பது ஆச்சர்யத்துக்கு உண்டான விஷயத்துக்கு காரணம் டிசம்பரில் எலக்ட்ரால் காலேஜ் என்னும் இன்னுமொரு தேர்தல் டிசம்பர் மாதம் முதல் திங்கட்கிழமை நடக்கும். என்னடா இது ஒரு நாட்டுக்கு இரண்டு வகை தேர்தலா என கேட்பதற்கு முன் நானே சொல்லிவிடுகிறேன்.
அமெரிக்க தேர்தல் படி படியாக நடக்கும் ஒரு விஷயம். 50 மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாடு தான் யுனைட்டட் ஸ்டேட்டஸ் ஆப் அமெரிக்க எனப்படும் ஒரு மாபெரும் விந்தையான நாடு. அமெரிக்க தேர்தலில் முக்கியானவர்களாய் கருதப்படுவது - பிரசிடண்ட் எனப்படும் ஜனாதிபதி, வைஸ் பிரசிடண்ட் என்னும் துணை ஜனாதிபதி. இவர்கள் எப்படி தேர்தல் திருவிழாவில் பங்கு பெறுகின்றனர் அல்லது தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.
நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் லீப் இயர் எனப்படும் 29 நாட்களை கொண்ட பிப்ரவரி மாதம் தான் அமெரிக்க தேர்தல் நடைப்பெறும். தேர்தல் நடைப்பெறும் ஆண்டின் ஸ்பிரிங் காலத்தில் அதாவது குளிரகாலம் முடிந்து வரும் நாட்களை தான் ஸ்பிரிங் எனப்படும் காலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட விரும்பும் ஆட்கள் பெடரல் எலக்ஷன் கமிஷனில் பதிவு செய்வார்கள். இதற்க்கு குறிப்பிட்ட தேதி என்று எதுவும் இல்லை.பெயர் கொடுத்த பின் தான் அமெரிக்க ஜனாதிபதி பதிவுக்கு நிற்கிறேன் என்று பொது மக்களுக்கு அவர்களாகவே தான் விருப்பை வெளியிடுவார்கள்.
அதன் பின்பு கோடை காலமான சம்மரில் பிரைமரி மற்றும் காகஸ் வழக்காடுகள் நடை பெறும். ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஜனாதிபதி தேர்தலில் நிர்ப்பவரை மாநிலங்களும் / கட்சிகளும் பிரெசிடென்ச்சில் பிரைமரி மற்றும் காக்கஸ் விவாதங்களை உருவாக்கும். ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஜனாதிபதியாக நிற்பவர்கள் துணை ஜனாதிபதி யார் என்பதை அறிவிப்பார்கள். இந்த நேரத்தில் கட்சிகள் கன்வெக்ஷன்களை நடத்தி ஒரு வழியாக யார் தான் கட்சியின் அதிகாரபூர்வ ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் . ஏன் என்றால் ஒரே கட்சியில் இரண்டு பேர் கூட இந்த தருணம் வரை தான் ஜனாதிபதி பதவிக்கு நிற்கிறேன் என்று கூடவே வந்து கடைசியில் விலகி கொண்டு ஒருவர் ஒரு கட்சிக்கு என முடிவாகும் நபரே அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்.
பின்பு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஜனாதிபதி வேட்பாளர் விவாதங்கள் பல பொது மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும். வேட்பாளர்கள் ஒரே மேடையில் தான் எதற்கு நிற்கிறோம் என்ன மாறுதல்களை கொண்டு வருவோம், எதிர் வேட்பாளர் அல்லது எதிர் கட்சிகளின் பிரசினை அவர்கள் செய்த தவறுகளை எடுத்துரைப்பார்கள். இது மட்டும் அல்ல நெறியாளர் ஒவ்வொரு வேட்பாளரின் பேச்சை மாடரேட் செய்வது மட்டும் இல்லாமல் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு திணறடிப்பாளர்கள். அதில் அவர்கள் சொல்லப்படும் பதிலே அநேகமாய் இவர் தான் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என்பதை ஒரு மறைமுக கோடிட்டு காட்டும். Contd..... in Count down 2.