தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அறுபதாவது அமெரிக்க தேர்தல் கவுண்ட் டவுன்-1

08:04 AM Nov 06, 2024 IST | admin
Advertisement

ரு வழியாக இன்று தேர்தல் முடிந்தது என்று ஒட்டு போட்டவர்கள் இருக்கலாம் .அனால் வேட்பாளர்கள் இருக்க முடியாது காரணம் கடைசியில் வரும் எலக்ட்ரால் காலேஜ் ஒட்டு தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும். உதவி ஜனாதிபதிக்கும் இது தான் முறையா என்றால் ஆமாம் இது தான் நியதி. இப்போது எலக்ட்ரால் கேஜ் முறையை கவுண்ட் டவுனில் காணும் போதே என் வேட்பாளர் முன்னணியில் உள்ளார் என பல பேர் மார் தொட்டி கொள்ளும் நேரம் -ஆனாலும் அது நிரந்தரம் அல்ல. இன்று போட்ட அனைத்து ஓட்டுக்களை மாநிலங்கள் வாரியாக கூட்டு எண்ணிக்கை எனப்படும் டேபுலேஷன் டேபிளுக்கு செல்லும். இந்த 50 மாநிலங்களில் 48 மாநிலங்களில் ஒட்டு எண்ணப்பட்டு டேபுலேஷன் விஷயத்தில் மாற்றம் எதுவும் இல்லை. ஆனாலும் இந்த 48 மாநிலங்களில் உள்ள வாஷிங்க்டன் டிசி மணிலா வெற்றி ஓட்டுக்கள் அனைத்தும் அந்த எலக்ட்ரால் காலேஜ்க்கு முழுவதுமாக சென்று விடும். மிச்சமுள்ள மெயின் மற்றும் நெப்ரைஸ்க்கா மாநிலங்களின் ஒட்டு புரபொஷனல் முறையில் எலக்ட்ரால் காலேஜுக்கு செல்லும்.

Advertisement

வெற்றி வேட்பாளருக்கு குறைந்த பட்ச தேவையான எலக்ட்ரால் காலேஜ் ஒட்டு 270 இது மொத்த ஓட்டுக்கள் ஐம்பது சதவிகிதம் ஆகும். புரஜெக்டட் வின்னர் அதாவது அனுமானிக்கப்பட்ட வெற்றியாளரை மட்டுமே இன்று இரவு அறிவிப்பார்கள். அதாவது நம்மூரு எக்சிட் போல் போல... இந்த எலக்டர்ஸ் டிசம்பர் வக்கீல் ஒன்று கூடுவார்கள். அவர்கள் அந்த நேரத்தில் வெற்றி வேட்பாளர் யார்? அடுத்த துணை மற்றும் அமெரிக்க ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்வார்கள் ஆனால்....... இன்னும் என்னங்க.. ஆனால்-னு இழுக்குறீங்கன்னு கேட்பது எனக்கு மைண்ட் வாய்ஸ் கேக்குது....எலக்டர்ஸ் சில மாநிலங்களில் சில வினோத விதிகள் உண்டு அது போக அவர்கள் தவறு செய்தல் அவர்கள் எப்படி தண்டனை அல்லது நிராகரிக்கப்படுவார்கள் என்பது பல விஷயத்தை அடக்கியது தான் இந்த எலக்டர்ஸ் போடும் எலக்ட்ரால் காலேஜ் ஒட்டு.

Advertisement

அமெரிக்காவின் யாப்பு அதாவது கான்ஸ்டிடூஷின் படி தான் இந்த வினோத விதிகள் அடங்கும். உதாரணத்திற்ற்கு டிஸ்க்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா என்னும் மாநிலத்தில் 3 எலக்டர்ஸ் ஸ்டேட் பயன்பாட்டுக்கு என 23 யாப்பின் திருத்தப்படி ஸ்டேட் என்பது டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியவை குறிப்பிடும் .அதே நேரத்தில் எக்சிகியூட்டிவ் என்பவர் மேயர் மற்றும் மணிலா கவர்னரை குறிக்கும். ஒரே தலை சுத்தலாக இருக்குனு சொல்லும் போதே இந்த வேட்பாளர் தேர்தல் , எலக்ட்ரால் காலேஜ் போக இன்னொரு ஸ்பெஷல் அயிட்டம் ஒன்னு இருக்கு அதான் பாப்புலர் ஒட்டு என்னும் இன்னொரு ஒரு வினோதம். இந்த பாப்புலர் ஒட்டு எலக்டர்ஸ் வேட்பாளருக்கு அளிப்பார்கள். அது மட்டும் அல்ல சில எலக்டர்ஸ் ஜெயித்தால் அங்குள்ள எதிர் வேட்பாளரின் ஓட்டும் இந்த வேட்பாளருக்கு செல்லும் என்னும் இன்னொரு விநோதமும் நிறைந்தது தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.

ஏழு மாநிலங்கள் தான் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கும் அந்த வகையில் முதலில் கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு மற்றும் சில நாட்கள் கழித்து சரி சம போட்டி என்னும் தெரிவித்தது மட்டுமில்லாமல் தேர்தல் அன்று டிரம்ப் பின்னாடி தள்ளப்பட்டார் என்ற செய்தியோடு ஆரம்பித்த தேர்தல் இப்போது அதாவது இந்திய நேரப்படி 8 மணிவாக்கில் டிரம்ப் 120 இடங்களிலும் கமலா ஹாரிஸ் 86 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர். ஆனாலும் போன வருட தேர்தல் முடிந்து 3 நாட்கள் வரை பைடன் வெற்றி பெற்றார் என்று அறிவிக்காமல் போனதற்கான குளறுபடி அடுத்த வந்த ஜனவரி 6 ஆம் தேதி கேப்பிட்டல் கட்டிட ஆக்கிரமிப்பு என இன்று வரை டிரம்ப்பும் டிரம்பின் ஆதரவாளர்களின் வழக்கை சிந்தித்தபடி கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர் என்பது தனிக்கதை.

Tags :
president electionusUSAUSA Presidentஅதிபர்அதிபர் தேர்தல்அமெரிக்காஎலக்ட்ரால் காலேஜ் ஓட்டுட்ரம்ப்
Advertisement
Next Article