For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலகச் செஸ் சாம்பியன் குகேஷை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்!

05:54 AM Dec 26, 2024 IST | admin
உலகச் செஸ் சாம்பியன் குகேஷை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்
Advertisement

லக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நேரில் சந்தித்து பாராட்டினார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் அவருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசளித்தார்.

Advertisement

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் அவருக்கு வழங்கி இருக்கிறது.

அத்துடன் பிரதமர் தொடங்கி சினிமா துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். மட்டுமின்றி குகேஷை தமிழகம், இந்தியா தொடங்கி உலகம் முழுவதும் உள்ள பிரபல நிறுவனங்கள் அழைத்து கவுரப்படுத்தி வருகிறது.

Advertisement

இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அங்கு அவருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்த சிவகார்த்திகேயன், குகேஷுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசளித்தார். இந்த சந்திப்பில் குகேஷின் பெற்றோரும் உடனிருந்தனர்.

சிறுவயதிலிருந்தே சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ், நடிகரிடமிருந்து ஒரு அர்த்தமுள்ள பரிசை - ஒரு கடிகாரத்தைப் பெறுவதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். அதே சமயம் குகேஷின் குறிப்பிடத்தக்க சாதனையை சிவகார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார், இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கு ஒரு உத்வேகம் என்று விவரித்தார்.

குகேஷின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி விழா நடத்தியதன் மூலம் இந்த சந்திப்பு இருவருக்குமே இன்னும் மறக்க முடியாததாக மாறியது.

Tags :
Advertisement