For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சார் - விமர்சனம்!

07:18 PM Oct 18, 2024 IST | admin
சார்   விமர்சனம்
Advertisement

செயற்கை நுண்ணறிவு, வான் ஆராய்ச்சி,ரோபோட்டிக்ஸ் என தொழில்நுட்பத் துறை வளர்ச்சியோடு கல்வித்துறையும் செயல்படும்போது, அடிப்படைக் கல்விக்கே வழிக் கொடுக்காமல் கொத்தடிமைகளாக வாழும் குடும்பங்களை கொண்ட தமிழ்நாட்டில் கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அந்த கல்வியை கடவுளின் பேரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்யும் சதியைப் பற்றி எக்ஸ்போஸ் செய்துார் என்ற டைட்டிலில் ஒரு படத்தை வழங்கி சல்யூட் பண்ண வைத்து விட்டார் டைரக்டர் போஸ் வெங்கட் ..! ஆனால் தான் கையில் எடுத்த சப்ஜெக்டை சகல தரப்பினரும் ரசிக்க வேண்டும் என்ற ஆசையில் தேவையில்லாத லவ் சீன்களையும், லாஜிக் மீறல்களையும் சேர்த்துதான் கொஞ்சம் தப்பாகி விட்டது.. ஆனாலும் சார் பாஸாகி விட்டார் என்பதே உண்மை.

Advertisement

அதாவது கிராமம் ஒன்றில் உள்ள தக்கணூண்டு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சரவணன். தனது அப்பா ஊர் மக்களை எதிர்த்துப் போராடி கட்டிய இந்த தொடக்கப் பள்ளியை தான் நடுநிலை பள்ளியாக மாற்றியது போல் தனது மகன் சிவஞானம் ( விமல்) இந்த பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்ற வேண்டும் என்பது தான் அவரது ஆசை. அதையொட்டி விமல் வெளியூரில் படித்துவிட்டு விருப்பமே இல்லாம சொந்த ஊருக்கு ஆசிரியராக வருகிறார். விமலின் தாத்தாவை சாமி அடித்து அவர் புத்தி பேதலித்துவிட்டதாக ஊருக்குள் ஒரு கதை வலம் வருகிறது. சின்ன வயதில் இருந்தே கிறுக்கு வாத்தியார் பேரன் என்று அவரை கூட படிக்கும் சிறுவர்கள் கேலி செய்கிறார்கள். அதேபோல் ஒரு கட்டத்திற்கு மேல் விமலின் அப்பாவும் மனம் பிறழ்ந்தவராக மாறுகிறார் - ஸாரி மாற்றப்படுகிறார் . இது விமலை உளவியல் ரீதியாக பாதிக்கிறது.மறுபக்கம் இந்த பள்ளியை எப்படியாவது இடிக்க வேண்டும் என்பது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆடுகளம் ஜெயபாலனின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு அவர் கடவுள் என்ற ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார். அதாவது சாமி போகிற பள்ளிக்கூடம் இருப்பதால் தெய்வ குத்தம் ஏற்படும் என்று சொல்லி அதற்கேற்றபடி சதிதிட்டங்களை தீட்டுகிறார்.அவர் எண்ணப்படி கிராமத்துக்கு பள்ளியே வேண்டாம் என்று அடாவடி செய்து பள்ளி கட்டிடத்தை இடிக்க முடிவு செய்கின்றனர். அவர்களால் பள்ளி கட்டிடத்தை இடிக்க முடிந்ததா? ஊர் பிள்ளைகளை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்க முடிந்ததா , சிவஞானம் எடுத்த முடிவு என்ன என்ற கேள்விகளுக்கு சினிமா பாணியில் பதில் சொல்வதே சார் படக் கதை.

Advertisement

மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்ற பெயரி கிராமத்து வாத்தியாராக நடித்துள்ள விமல் தன்னால் முடிந்த நடிப்பைக் கொடுத்து சமாளித்திருக்கிறார். ஆரம்ப காலம் முதல் வித்தியாசமில்லாத தோற்றம், ஒரேமாதிரியான முகபாவனைகள், வெள்ளந்தியான பேச்சு மட்டுமே போதும் என்ற நினைப்பிலிருந்து விமல் உடனடியாக வெளியேற சூழலிது. விமலின் அப்பாவா நடித்திருக்கும் ‘பருத்திவீரன்’ சரவணன், நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, சிறப்பான நடிப்பு மூலம் தான் கமிட் ஆன கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். தனது அப்பாவின் பைத்தியகாரப் பட்டம் தனக்கும் வந்ட பிறகு, அவரை கட்டி வைத்திருந்த சங்கிலியை எடுத்து தனக்கு தானே சிறைபடும் காட்சியில் கண்கலங்க வைத்து விடுகிறார். நாயகனின் நண்பராக வலம் வந்தாலும், சாதி வெறியால் தனது முன்னோர்கள் செய்த நயவஞ்சகத்தின் மூலம் நண்பர்களை கொல்ல துடிக்கும் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் சிராஜ், புதுமுக நடிகராம்.நம்பமுடியவில்லை.. வாழ்த்துகள் சிராஜ். சாயாதேவி, ரமா, ஜெயபாலன் மற்றும் பலர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் ஆசிரியராக வரும் சந்திரகுமாரின் தோற்றம் பெரியார்தானே?

இனியன் ஹாரிஸூடைய ஒளிப்பதிவும், சித்துகுமார் இசையில் ‘படிச்சுக்குறோம்’ என்ற பாடல் உருக்கமாக உள்ளது. பின்னணி இசையும் படத்திற்கு பலம்.

மொத்ததில் அருமையான நாட், கிராமங்க்களில் கல்வி கற்பதிலும், கற்றுக் கொடுப்பதிலும் உள்ள அரசியல்,சுகுணா திவாகரனின் கைதட்டல் வாங்கும் வசனங்கள் மற்றும் இப்போதைய நிலையில் கல்வி போதித்து அறியாமையைப் போக்குவது என்பது ஒரு தலைமுறையில் சாத்தியப்படக்கக்கூடிய விஷயம் அல்ல என்பதை எல்லாம் புரியும்படி சொல்லி பாஸ் ஆகி விட்டார் சார்!

மார்க் 3.25/5

Tags :
Advertisement