For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சிம் கார்டு ரீசார்ஜ் செய்யாமலே 4 மாதம் ஆக்டிவாக இருக்கும்!

12:20 PM Jan 21, 2025 IST | admin
சிம் கார்டு ரீசார்ஜ் செய்யாமலே 4 மாதம் ஆக்டிவாக இருக்கும்
Advertisement

ம்மில் பெரும்பாலானோர் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் 2024 ஜூலை முதல் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி விட்டதால் ஏகப்பட்ட பயனர்கள் பிஎஸ்என்எல் பக்கம் போய் விட்டனர். சிலர் ஒரு சிம் மட்டும் வைத்துக் கொண்டு மற்றொரு சிம்மை க்ளோஸ் செய்தனர். இந்நிலையில் அக் கட்டண உயர்வால் சிரமப்படும் வாடிக்கையாளர்களுக்கு TRAI நற்செய்தியை வழங்கியுள்ளது. அது என்னவென்றால், பிஎஸ்என்எல் (BSNL) , ஜியோ (JIO) , ஏர்டெல் (Airtel), வோடபோன் (vi), போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் பயனர் ரூ. 20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என்று  அறிவித்துள்ளது.

Advertisement

அதாவது ஒரு சிம்மை செயலில் வைத்திருக்க குறைந்தபட்சம் ரூ.200 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் இப்போது ரீசார்ஜ் முடிந்த 90 நாட்களுக்கு உங்கள் சிம் செயலில் இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நெட்வொர்க்கில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். உங்கள் திட்டம் முடிந்த பிறகு சிம் 3 மாதங்களுக்கு செயலில் இருக்கும். ஆம்.
நீங்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாவிட்டாலும் உங்கள் சிம் 90 நாட்களுக்கு செயலில் இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகும் நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், உங்கள் சிம்மில் ரூ.20 ப்ரீபெய்ட் பேலன்ஸ் இருந்தால் நிறுவனம் அதைக் கழிக்கும். ரூ.20 கழித்த பிறகு சிம்மின் வேலிட்டி காலம் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படும்.

Advertisement

அதாவது எந்த திட்டமும் இல்லாமல் உங்கள் சிம் 120 நாட்களுக்கு அதாவது 4 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இந்த 4 மாத வேலிடிட்டிக்கு வெறும் ரூ.20 செலுத்தினால் போதும். இந்த காலத்தில் பயனர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த சிம் கார்டின் சேவை நிரந்தரமாக முடக்கப்படும்.இந்த 15 நாட்கள் காலத்தின் உள்ளேயே, சிம் கார்டை மீண்டும் செயல்படுத்த தேவையான ரீசார்ஜ் செய்வதன் மூலம் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement