For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மிஸ்டர் ஐசிசி என்ற ஷிகர் தவான் ஓய்வு!

07:39 PM Aug 24, 2024 IST | admin
மிஸ்டர் ஐசிசி என்ற ஷிகர் தவான் ஓய்வு
Advertisement

ந்திய அணியின் ஸ்டார் வேல்யூ கிரிக்கெட் வீரரான மிஸ்டர் ஐசிசி என்று அழைக்கப்படும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சர்வதேச போட்டி மற்றும் உள்நாட்டு போட்டித் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது விளையாட்டு ரசிகர்களிடையே பேசு பொருளாகி உள்ளது .ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கட் தொடர்களில் மட்டுமே விளையாட மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார் இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்றே தெரிகிறது.

Advertisement

இதுகுறித்து ஷிகர் தவான் வெளியிட்டுள்ள வீடியோவில், '‘எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தும் விட்டேன். எனது பயணத்தில் பங்களித்த பலருக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் என் குடும்பம். எனது சிறுவயது பயிற்சியாளர் லேட் தாரக் சின்ஹா ​​மற்றும் மதன் ஷர்மா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நான் விளையாட்டின் அடிப்படைகளை கற்றுக்கொண்டேன்.

Advertisement

நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடிய எனது அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்தது, பெயர், புகழ் மற்றும் ரசிகர்கள் அனைவரின் அன்பும் எனக்கு கிடைத்தது. முழுக்கதையையும் படிக்க வேண்டுமானால், பக்கத்தைப் புரட்ட வேண்டும் என்ற பழமொழி உண்டு. அதைத்தான் நான் செய்யப் போகிறேன். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். நான் நாட்டிற்காக அதிகம் விளையாடியதால் நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ மற்றும் டிடிசிஏவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு அன்பைக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நானே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் மீண்டும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று வருத்தப்பட வேண்டாம். ஆனால் அவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடியதில் அவர் மகிழ்ச்சியடைகிறார். என்னைப் பொறுத்தவரை நான் விளையாடியதுதான் பெரிய விஷயம்’. இவ்வாறு தவான் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரரான ஷிகர் தவான். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒரு நாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 222 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.

Tags :
Advertisement