For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கேரளா: கிரீஷ்மாவுக்கு சாகும் வரை தூக்கு!

01:27 PM Jan 20, 2025 IST | admin
கேரளா  கிரீஷ்மாவுக்கு சாகும் வரை தூக்கு
Advertisement

கேரளாவைச் சேர்ந்த ஷாரோன் ராஜும், கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்துள்ளனர்.இதற்கு கிரீஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இதை அடுத்து கிரீஷ்மா, தன் காதலன் ஷாரோனுடன் தொடர்பை குறைத்தார். ஆனால் ஷாரோன் தொடர்ந்து கிரீஷாவுடன் பேச முயற்சித்தார். இருவரும் நெ.ருக்கமாக இருந்த போட்டோக்கள் ஷாரோனிடம் இருந்ததால் ஒரு கட்டத்தில் அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.. இதில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 11-நாள் சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

இதனையடுத்து, நடந்த பிரேத பரிசோதனையில் சாரோன் உடலில் அளவுக்கு அதிகமான நச்சு கலந்திருந்ததால் உயிரிழந்ததாக தெரியவந்தது. இந்த நிலையில், பாறசாலை போலீசார் நடத்திய விசாரணையில் காதலி கிரீஸ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து, கிரீஷ்மா மீது கொலை வழக்கும், உடந்தையாக இருந்ததாக அவரது தாய் சிந்து மற்றும் தாய்மாமன் நிர்மல் குமார் ஆகியோர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் உத்தரவு படி 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி கிரீஷ்மாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

அதில், 2-மாதத்திற்கு முன்பே ஷாரோனை கொலை செய்ய திட்டமிட்டதும் தொடர்ந்து 10-முறை குளிர்பானத்தில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததும், ஆனால் ஷாரோன் எந்த பாதிப்பின்றி தப்பிய நிலையில் தான் வீட்டிற்கு அழைத்து சென்று கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து விசாரணை செய்த நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட் கிரீஷ்மா(24) மற்றும் பூச்சிமருந்து வாங்கிக்கொடுத்த அவரது தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியிருந்தது. அவர்களுக்கான தண்டனை சனிக்கிழமை வழங்கப்பட உள்ளதாக கோர்ட் கூறியிருந்தது.

அதே சமயம் சனிக்கிழமை இறுதிக்கட்ட வாதம் நடந்தது. அப்போது, தான் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும், இன்னும் படிக்க வேண்டும். தனக்கு 24 வயதுதான் ஆகிறது. எனவே தண்டனையில் இயன்ற அளவு கருணைகாட்ட வேண்டும் என கிரீஷ்மா கோர்ட்டில் மனு அளித்திருந்தார்.

ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர், `ஒரு இளைஞனின் காதலை கிரீஷ்மா கொன்றிருக்கிறார். காதலிப்பதாக நடித்து வீட்டுக்கு அழைத்து கொலை செய்துள்ளார். கொடூரமான ஒரு குற்றவாளியால் மட்டுமே இப்படிப்பட்ட கொடூரத்தை செய்ய முடியும். மிகத் துல்லியமாக திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளார். ஷாரோன்ராஜ் 11 நாட்கள் மருத்துவமனையில் பட்ட வேதனைகள் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உள்ளது. இது தற்செயல் கொலையல்ல முன்கூட்டியே திட்டமிட்டதாகும். ஷாரோன்ராஜிக்கும் நிறைய கனவுகள் இருந்தன. அந்த கனவுகளை கிரீஷ்மா தகர்த்துவிட்டார். கிரீஷ்மா எதற்கும் வருத்தப்படமாட்டார். கிரீஷ்மா பிசாசின் சுபாவம் கொண்டவர், எனவே அவர் கருணைக்கு தகுதியற்றவர். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி பஷீர் இன்று வழங்கிய தீர்ப்பில்`குற்றவாளிக்கு இதற்கு முன்பு குற்ற வழக்கு பின்னணி இல்லை என்பதை கணக்கில் எடுக்க முடியாது. அவர் ஏற்கனவே ஷாரோன்ராஜை கொலைச் செய்ய முயன்றுள்ளார். அவரது வயதையும் கணக்கில் எடுக்க முடியாது. ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலைச் செய்ய கிரீஷ்மா முயன்றுள்ளார். ஷாரோன் ராஜ் அனுபவித்தது மிகப்பெரிய வேதனை.11 நாட்கள் மருத்துவமனையில் ஒருச்சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியாமல் அவர் அனுபவித்தது மிகப்பெரிய வேதனை. ஆனாலும், அவர் கிரீஷ்மாமீது குற்றம் எதுவும் சொல்லவில்லை. கிரீஷ்மா விசாரணையின்போது காவல் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்ய முயன்றது விசாரணையை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சி ஆகும். எனவே இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடாது என்பது இல்லை” என தெரிவித்த நீதிபதி கிரீஷ்மாவுக்கு சாகும் வரை தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். மேலும் பூச்சிமருந்து வாங்கிக்கொடுத்த கிரீஷ்மாவின் தாய்மாமா நிர்மல் குமாருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement