For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பெண்களின் ஊதியமில்லா உழைப்புக்கு உரிய மதிப்பு வழங்க தொடங்குவோமா?

09:19 PM Dec 02, 2023 IST | admin
பெண்களின் ஊதியமில்லா உழைப்புக்கு உரிய மதிப்பு வழங்க தொடங்குவோமா
Advertisement

த்தியப் பிரதேச ஐகோர்ட்டுக்கு திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று வந்தது. அந்த விசாரணையில், கணவர் தொடர்ந்து மனைவியை அடித்ததாக ஒப்புக் கொண்டார். அதற்கு அவர் கூறிய நியாயம் என்னவென்றால், “அவர் காலை உணவை 6 மணிக்குச் சாப்பிட விரும்பினார். ஆனால் மனைவி காலை 7 மணிக்குத்தான் எழுந்தார்; என்பதாகும். அப்பிரச்சனையில் ஐகோர்ட் தாம்பத்திய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணையை ரத்துச் செய்து, “ஒரு அர்ப்பணிப்புள்ள மனைவியாக, கணவன் வேலைக்குச் செல்வதற்கு முன் எழுந்து கணவனுக்குத் தேவை யான உணவைத் தயார் செய்வது மனைவியின் கடமை,” என்று கூறியுள்ளது.

Advertisement

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Advertisement

ஆனால் சுப்ரீம் கோர்ட் இதில் மாறுபட்டு, பெண்களுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பை அளித்தது. வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண்களே செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பாலினப் பாகுபாட்டுக் கற்பிதங்களுக்கு அடி கொடுப்பது போல, பின் வருமாறு கூறியுள்ளது. “அனைத்துப் பாலின மக்களும் வீட்டு வேலைகளைச் செய்ய சமமாகத் திறன் கொண்டவர்கள். பெண்கள் மட்டுமே வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று ஆண்கள் பெரும்பாலும் நிபந்தனை விதிக்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் வீட்டு வேலைகளுக்கு அர்ப்பணிக்கும் நேரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பெண், பெரும்பாலும் முழுக் குடும்பத்திற்கும் உணவைத் தயாரித்து, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற வீட்டுத் தேவைகளை வாங்குவதை நிர்வகித்தல், வீட்டையும் அதன் சுற்றுப்புறங்க ளையும் சுத்தம் செய்தல், பழுதுபார்த்தல் மற்றும் பராம ரித்தல் உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்கிறார். குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள வயதானவர்களின் தேவைகளை கவனிக்கிறார். வரவு செலவுகளை நிர்ணயிக்கிறார். கிராமப்புறங்களில், கால்நடை களைப் பராமரிப்பதோடு, விவசாய வேலைகளில் அவர்கள் பெரும்பாலும் உதவுகிறார்கள். இருப்பி னும், மேற்கூறிய அனைத்தையும் செய்தாலும், பெண்கள் பொருளாதார ரீதியாக பங்களிப்பதில்லை என்ற கருத்தே நிலவுகிறது,” என்று கூறியுள்ளது.

பரந்த அர்த்தம் தேவை

மேலும் விபத்தில் இறந்த ஒரு பெண்ணின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் 2020 ஜூன் 18 அன்று {ராஜேந்திர சிங் எதிர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பிறர்} மனைவி/தாய் குடும்பத்திற்கு அதாவது கணவன் மற்றும் பிள்ளைகளுக்குச் செய்யும் சேவைகளுக்கு ஈடாக எந்தத் தொகையையும் கணக்கிட முடியாது என்று தீர்ப்பளித்தது. எவ்வாறாயினும், சார்ந்திருப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, மனைவியின் தாயின் சேவைகள் குறித்து சில பண மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டும். அந்தச் சூழலில், “சேவைகள்” என்ற வார்த்தைக்கு ஒரு பரந்த அர்த்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், இறந்தவர் தனது குழந்தைகளுக்கு தாய் மற்றும் அவரது கணவருக்கு மனைவியாக இருந்து வழங்கிய தனிப்பட்ட கவனிப்பு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியது. இறந்த மனைவிக்கு வழங்கிடும் இலவச சேவைகளை ஈடு செய்யும் வகையில் போதிய இழப்பீடு பெற உரிமை உண்டு என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது. முதல் முறையாக பெண்களின் வீட்டு வேலைகள் என்ற சேவையைக் கணக்கில் கொண்டு வருமானத்தை நிர்ணயிக்க வழி செய்யும் வகையில் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில், பெண்களின் கோரிக்கைக்கு ஆதரவாகச் சில ஆய்வுகள் இந்தியாவில் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் பெண்களின் வேலை களை மதிப்பிடுவதன் முக்கியத்துவம் குறித்து, இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்ஏ), தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (என்எஸ்எஸ்ஓ), நேரப் பயன்பாட்டு ஆய்வு (டியுஎஸ்), ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவான எகோராப் ஆகிய அமைப்புகள் இணைந்து, பெண்கள் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் எத்தனை மணி நேரம் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

நேர வறுமை

“15 முதல் 60 வயது வரையிலான பணிபுரியும் வயதுப் பிரிவைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் தங்கள் தினசரி நேரத்தில் சுமார் 432 நிமிடங்கள் அதாவது 7.2 மணிநேரம் வீட்டு வேலையில் செலவிடுகிறார்கள். அதேபோல ஆண்கள் 2.8 மணிநேரத்தை தனது வேலைக்காக செலவிடுகிறார்கள்” ஆகையால் பெண்களுக்கு ஓய்வெடுக்கக் கூட நேரம் கிடைக்காத “நேர வறுமை” இருப்பதாக ஐஐஎம்ஏ பேராசிரியர் நம்ரதா சிந்தார்கர் கூறினார். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சமீபத்திய அறிக்கை, தங்கள் குடும்பத்திற்காக வீட்டு வேலைகளைச் செய்யும் அனைத்து பெண்களுக்கும் அவர்களின் வேலைக்கான ஊதியம் வழங்கப் பட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் தொகை இந்தி யாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதத்திற்கு சமமாக இருக்கும் என்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை யில், உலகம் முழுவதும் உள்ள 64 நாடுகளில் உள்ள அனைத்துப் பெண்களும் 1,640 கோடி மணிநேரம் தினசரி ஊதியம் ஏதுமின்றி வேலை செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது (லைவ் ஹிந்துஸ்தான்).

இரண்டாவது ஷிப்ட்

பல ஆண்டுகளாக, பாலின சமத்துவமின்மையை ஆய்வு செய்வதற்கான ஒரு கருவியாக நேரப் பயன்பாட்டு ஆய்வுத் தரவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஐரோப்பாவில் நடத்தப்பட்ட நேரப் பயன்பாட்டு ஆய்வுகளின் அடிப்படையிலான தரவு கள், பல்வேறு செயல்பாடுகளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான நேர வேறுபாட்டைப் புரிந்துகொள்வதற்கான கருவியாக இருக்கின்றன.. மேலும், வேலைக்கு போகும் பெண்கள் வீட்டு வேலை, குடும்ப பராமரிப்பு போன்ற அன்றாடம் பணி களில் ஈடுபடும் சூழல் உள்ளது. இதனால் பணி யிடங்களில் கூடுதல் மணிப் பொழுதுகளைப் பெண்களால் செலவிட முடிவதில்லை. குறிப்பாக, பெண்களின் நேரத்தின் பெரும்பகுதி, அவர்களது வேலை நிலையைப் பொருட்படுத்தாமல் வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவே செல விடப்படுகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, இது பெரும்பாலும் “இரண்டாவது ஷிப்ட்” என்று கூறுகிறது அந்த அறிக்கை.

“சராசரியாக, எரிவாயு அல்லது பிற சமையல் எரி பொருளைப் பயன்படுத்தும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பாரம்பரிய எரிபொருட்களைப் பயன் படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, உணவு தயாரிக்கும் நேரத்தை உள்ளடக்கிய, வீட்டுவேலைகளில் குறைந்த நேரத்தைச் செலவிடுவதாக டியுஎஸ் (TUS) தரவு தெரிவிக்கிறது. பாரம்பரிய எரிபொருட்க ளைப் பயன்படுத்துவதை விட எல்பிஜி அல்லது பிற சமையல் எரிபொருட்களைப் பயன்படுத்தினால் 41 முதல் 80 நிமிடங்கள் கூடுதல் ஓய்வு நேரம் கிடைக்கும். மேலும் மின்சாரம் உள்ள வீடுகளில் பெண்கள் ஓய்வுக்காக செலவிடும் சராசரி நேரம், மின்சாரம் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது சுமார் 35 நிமிடங்கள் கூடுதல்” என்கிறது அறிக்கை. சராசரி யாக, கிராமப்புற பெண்களுக்கு ரூ.5,000, நகர்ப்புற பெண்களுக்கு ரூ.8,000 மாத வருமானம் என்று எகோராப் ஆராய்ச்சி கருதுகிறது. கிராமப்புறங்களில் 5 சதவீத பெண்களும் நகர்ப்புறங்களில் 30 சதவீத பெண்களும் கூலிக்கு வேலை செய்கிறார்கள் என்ற கூடுதல் அனுமானமும் உள்ளது.

ஆகவே, பெண்களின் வீட்டு வேலைகளை மதிப்பிடத் தொடங்கும் நேரம் இது. வீட்டு வேலைக்காக பெண்களுக்கு சம்பளம் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மரியாதை, அங்கீகாரம், கண்ணியம் மற்றும் அதிகாரம் கிடைக்கும். பல்வேறு தனிப்பட்ட வீட்டு வேலைகள் சமூக வேலைகளாக மாறுவதில்தான் இறுதியான உறுதியான தீர்வு இருக்கிறது. ஆயினும், இன்றைய உடனடிச் சூழலில் பெண்களின் ஊதியமில்லா உழைப்புக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவது ஒரு முக்கியமான வளர்ச்சியாக அமையும். இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறிக்கொள்கிறது. அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் பெண்களின் பங்கேற்பு இல்லாமல் அது நடக்காது. பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளித்து, சமூகத்தில் பெண்கள் குறித்த கற்பிதங்க ளை உடைத்து, பெண்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

பா.ஹேமாவதி : இளம் வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

Tags :
Advertisement