அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் விஞ்ஞான ரீதியிலான கோடைகால பயிற்சி முகாம் 2024!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவியரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ள நிலையில் பதில் அளித்துள்ள நிலையில் அண்ணா தி.மு.க.ஆட்சியில் 200 முதல் 2000 ரூபாய்வரை வசூலித்ததை முறைபடுத்தி குறைந்த தொகை வசூலிப்பதாக விளக்கம் வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயனுள்ளதாகவும், பொழுதுபோக்காகவும் கொண்டாடும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சியை நடத்தி வருகிறது. இதன்படி ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
2013ல் விளையாட்டுக்கு தகுந்த படி வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது.மாணவர்களிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் 76 பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையில் நடப்பாண்டில் இன்று ஏப்ரல் 29 முதல் மே 13 வரை கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இடத்துக்கான பயிற்சிக் கட்டணம் தற்போது முறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500/ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ரூ200 மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும். மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2023 முதல் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ. 15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.