For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது செயற்கைக்கோள் ‘எக்ஸ்போசாட்’!

11:58 AM Jan 01, 2024 IST | admin
விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது செயற்கைக்கோள் ‘எக்ஸ்போசாட்’
Advertisement

திட்டமிட்டப்படி இன்று காலை 9.10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, எக்ஸ்போசாட் செயற்கைக்கோல் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்டில் இருந்து எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிந்தது. இதையடுத்து செயற்கைக்கோளை பூமியில் இருந்து 650 கி.மீ., தொலைவில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே செயற்கைக்கோளின் சோலார் தகடுகள் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது உலகளவில், இஸ்ரோவினுடையது இரண்டாவது சாதனை என்றாலும், வழக்கம்போல செலவினத்தில் நாசாவை விட மிகக்குறைவன செலவு செய்ததி இஸ்ரோ பெருமிதம் கொள்கிறது. .கருந்துளைகளை ஆராய நாசாவின் விண்வெளித் திட்டத்துக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 188 மில்லிய டாலர் செலவானது. ஆனால் அதில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்காக 30 மில்லியன் டாலர் செலவிலேயே கருந்துளை ஆய்வுக்கான விண்வெளித் திட்டத்தை உருவாக்கி உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement

ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனை அறிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், “புத்தாண்டு தொடங்கியது. எக்ஸ்போசாட் வெற்றிகரமாக விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது” என்று தெரிவித்தார். இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக்கோளை கொண்ட 2-வது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.

Advertisement

அதாவது சந்திரனை ஆராய சந்திரயான், செவ்வாயை ஆராய மங்கள்யான், சூரியனை ஆராய ஆதித்யா என இந்தியாவின் இஸ்ரோ, விண்வெளி ஆய்வில் பெருமைக்குரிய பாய்ச்சல்களை எடுத்து வருகிறது. அவற்றில் அடுத்த மைல்கல்லாக கருந்துளை(Black Hole) என்பதை குறிவைத்திருக்கிறது இஸ்ரோ. கருந்துளை என்பது இந்த பிரபஞ்சத்தின் ஆச்சரிய புதிர்களில் ஒன்று. ஒரு பொருள் எரிந்து கரியாக மாறுவதை பார்த்திருப்போம். உதாரணத்துக்கு மரத்துண்டு ஒன்று எரியும்போது அதிலிருந்து வெப்பம், ஒளி ஆகியவை வெளிப்படும். எரிந்து முடித்ததும் கரித்துண்டாக மாறிவிடும். இப்படி ஒளியையும், வெப்பத்தையும் உமிழும் நட்சத்திரங்கள், தங்கள் வாழ்நாளின் இறுதியில் மரணித்துப்போய் இன்னொன்றாக மாறுவதை கருந்துளை என்கிறோம்.

அணுக்கரு இணைவு மூலமாக தனது வாழ்நாளில் முழுக்க ஈர்க்கும் நட்சத்திரங்கள் அதன் பிறகு கருந்துளையாகி, புதைகுழிக்கு இணையான ஒன்றாக மாறிவிடுகின்றன. அதன் ஈர்ப்புவிசை காரணமாக எந்த ஒன்றையும் தனக்குள் இழுத்துக்கொள்ளும் பிரம்மாண்ட கருந்துளையாக உருமாற்றம் அடைகின்றன.

இயங்கும் கோள்கள், நட்சத்திரங்களுக்கு இணையாக இந்த கருந்துளைகளை ஆராய்வதும் முக்கியமானது. அப்படி அமெரிக்காவின் நாசாவுக்கு அடுத்தபடியாக, கருந்துளையை ஆராய விண்ணுக்கு பாயவிருக்கிறது ’எக்ஸ்போசாட்’. எக்ஸ்ரே போலாரிமீட்டர் சாட்டிலைட் என்பதன் சுருக்கமே எக்ஸ்போசாட். (XPoSAT: X-ray Polarimeter Satellite)

முன்னதாக எக்ஸ்போசாட் விண்வெளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 2015-ம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக எக்ஸ்போசாட் (XPoSat-X-ray Polarimeter Satellite) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. எக்ஸ்போசாட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இது பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. இதற்காக எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ கிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டர்) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு படிநிலையாக ராக்கெட்டை விண்ணில் நிலைநிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இவை விண்வெளியில் பரவும் எக்ஸ்கதிர்களின் துருவ முனைப்பு அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான்நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் நெபுலா உட்பட பல்வேறு அம்சங்களை ஆராயும். மேலும், ஒரே நேரத்தில் எக்ஸ் கதிர் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய முடியும். இந்த தரவுகள்,பிரபஞ்சத்தின் செயல்பாடு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement