For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் உயிரிழப்பு!

09:14 AM Feb 28, 2024 IST | admin
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் உயிரிழப்பு
Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சிறை தண்டனையில் இருந்து விடுதலையான சாந்தனுக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தவர்களை சுப்ரீம் கோர்ட் கடந்த 12.11.2022-ல் விடுதலை செய்தது. அதில் ஒருவரான சாந்தன் (55) திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அங்கு செல்ல அனுமதி வாங்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. சில தினங்களுக்கு முன்னரே அந்த அனுமதி மத்திய அரசிடமிருந்து அவருக்கு கிடைத்தது. இதனால் தீர்ப்பு வந்த நாள்முதலே முகாமில்தான் சாந்தன் தங்க வைக்கப்பட்டிருந்தார். இரண்டு நாளில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கடந்த பிப்ரவரி 24-ம் தேதி திருச்சி கலெக்டர் தெரிவித்திருந்தார்.

Advertisement

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் கல்லீரல் பிரச்னை காரணமாக அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னைக்கு மாற்றப்பபட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், இன்று (பிப். 28) அதிகாலையில் சாந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், காலை 7.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் அறிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த சாந்தன், 32 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு இலங்கை செல்ல இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement