For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கம்!

08:21 PM Nov 18, 2023 IST | admin
சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த  சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கம்
Advertisement

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிதி உதவி பெறும் நிறுவனமான OpenAI இல் ChatGPT-யை தொடக்கம் முதல், உருவாக்கம், பொதுவெளியில் கொண்டுவந்து வெற்றி அடையச் செய்தது வரை 38 வயதான சாம் ஆல்ட்மேன் சிஇஒ என்பவர் வழிநடத்தி வந்தார். இந்நிலையில், இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான Open AI போர்டுக்கும் ஆல்ட்மேனுக்கும் இடையே வெடித்த கருத்து வேறுபாடு காரணமாக அவரை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது, என தகவல் வெளியாகியுள்ளது .ChatGPTயின் நன்மைகள் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவு தீமைகளும் உள்ளன என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ChatGPT ஐ விட ஓபன்ஏஐ அதிக சக்திவாய்ந்த AI ஐ உருவாக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அதை வெளியிடத் தயாராக இல்லை என சாம் ஆல்ட்மேன் கூறியிருந்தார். ஆல்ட்மேன் முன்பு பயனர்கள் அதற்குத் தயாராக இல்லை என்றும், விளைவுகளைக் கணிப்பது கடினம் என்றும் கூறினார். சாம்; சமீபத்தில் சிலிக்கான் வேலியில் நடந்த முன்னணி டெவலப்பர் மாநாட்டில் பங்கேற்றார். AI மற்றும் அதன் சீர்குலைக்கும் சக்திகளைப் பற்றி மக்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் பற்றிய அவர் பேசியது நிறுவனத்திற்கு உடனான மோதலுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. எப்படி ஆனாலும் இத்தகவல் பல தரப்பிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மனிதனின் வேலைகளை எளிமையாக்குகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் வேலையை குறைக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே, அண்மையில் புதிய தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) உருவாக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட புரட்சியாக பார்க்கப்படும் சாட்ஜிபிடி, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கவும், சரளமாக உரையாடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு எப்படி சமைப்பது என்பதில் தொடங்கி, கதை, கவிதை எழுதுவது வரை அனைத்து ஆலோசனைகளை இந்த சாட்ஜிபிடி செய்து விடுகிறது.

Advertisement

இந்த சாட்ஜிபிடியை, ஓபன் ஏ.ஐ.(Open AI) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. சாட்ஜிபிடி அறிமுகமானதை தொடர்ந்து டீப்ஃபேக் தொழில்நுட்பமும் இணையத்தில் வைரலாகி தனி புரட்சியை செய்து வருகிறது. அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவில் தொடர்ந்து பிரதமர் மோடியின் கர்பா நடனம் வரை டீப்ஃபேக் செய்யப்பட்டு போலி வீடியோ வெளியானது. இதனால், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தப்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, இது தொடர்பாக தொழில் நுட்ப வல்லுநர்களிடம் ஆலோசிப்பதாகவும் எச்சரித்திருந்தார்.

இந்த சூழலில் சாட்ஜிடிபியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக மட்டும் இல்லாமல் இணை நிறுவனமாக இருந்த சா, ஆல்ட்மேனிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால் அவர் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் விடுவிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாம் ஆல்ட்மேன் மீதான நம்பகத்தன்மையை இழந்து விட்டதாக கூறியுள்ள ஓபன் ஏ.ஐ. நிறுவனம், அவருக்கு பதிலாக புதிய சி.இ.ஓ.வை நியமித்துள்ளது. 34 வயதான மீரா மூர்த்தி, ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். அல்பேனியா மற்றும் கனடாவில் கல்வி பயின்ற மீரா மூர்த்தி, சாட் ஜிபிடி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

இதில் சுவாரஸ்யமாக, OpenAI இல் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்த மைக்ரோசாப்ட், இந்த அறிவிப்பால் "கண்மூடித்தனமாக" உள்ளது என்று Axios தெரிவித்துள்ளது. ஓபன் ஏ.ஐ பொதுவெளியில் அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் ஆல்ட்மேனின் நீக்கம் பற்றி மைக்ரோசாப்ட் அறிந்ததாக கூறியுள்ளது.


மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா அறிவிப்புக்குப் பிறகு ஒரு சிறிய அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில், ஆல்ட்மேனைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, ஆனால் இது OpenAI உடனான தொழில்நுட்ப நிறுவனத்தின் நீண்ட கால ஒப்பந்தத்தை வலியுறுத்தியது. மீரா முராட்டி மற்றும் மீதமுள்ள ஓபன்ஏஐ குழுவின் மீதான நம்பிக்கையைப் பற்றியும் நாதெல்லா குறிப்பிட்டார். மேலும் AI டூல்ஸ் மற்றும் சேவைகளை உருவாக்க மைக்ரோசாப்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

Tags :
Advertisement