தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மொழிப்பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது -கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிப்பு!

09:02 PM Mar 11, 2024 IST | admin
Advertisement

ந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இலக்கியத்திற்காக அளிக்கும் உயரிய விருதான இந்த விருது மொழிபெயர்ப்புக்கும் தனியாக வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அளித்து கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. மமாங் தய் எழுதிய 'தி பிளாக் ஹில்' என்ற நாவலை மொழி பெயர்த்தற்காக சாகித்ய அகாடமி விருதை பெற உள்ளார். நாவலை எழுதிய மமாங் தய் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். கல்வி கற்று ஆட்சியர் பணிக்குத் தேர்வு பெற்றவர். ஆயினும் எழுத்தின் மீது இருந்த ஆர்வத்தால் ஒருசில ஆண்டுகளுக்கும் மேல் அந்தப் பணியில் அவர் தொடரவில்லை. பழங்குடியினரைப்பற்றி பல ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட தொடர் ஆய்வுகளும் வரலாற்றின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வமும் இத்தகு ஒரு கதைக்கருவை மையமாக்கி நாவலாக எழுதத் தூண்டிவிட்டது.

Advertisement

அந்த நூல் தமிழில் ‘கருங்குன்றம்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அவர், வேறு மொழிகளில் இருந்து எனது அரசியல் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 185, இந்தியாவின் தேசியப் பண்பாடு, இந்திராகாந்தி , புத்தாக்க வாழ்வியல் கல்வி, அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு, உறவுப்பாலம்: இலங்கைச் சிறுகதைகள், சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன், கண்ணியமான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

Tags :
awardKannaiyan DhaksnamoorthySahitya Akademitranslationwriter
Advertisement
Next Article