சப்தம் - விமர்சனம்!
ஒருவர் அருமையாக பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். அப்போது எவராவது அருகில் சென்று "அடடே! சத்தம் நல்லா இருக்கு!" என்று சொன்னால் பாடுபவருக்கு கோபம் வரும் அல்லவா? அவருக்கு ஏன் கோபம்? ஒரு நல்ல இசையை "சத்தம்" என்று சொன்னது தானே! இதேபோல் தான் சத்தம் என்பதற்கும் ஒலி என்பதற்கும் உள்ள வேறுபாடும்.சத்தம் என்பது பொதுவான சொல். அது ஏதோ இறைச்சலாகவும் இருக்கலாம். பறவைகள் கூவும் சத்தமாக இருக்கலாம். மணியோசையாக இருக்கலாம். அல்லது ஒரு அழகான தாலாட்டாகவும் இருக்கலாம்.ஆனால் ஒலி/ஓசை என்பது ஒரு குறிப்பிட்ட வகையான சத்தம். அது சீராக இருக்கும். காதுகளுக்கு இனிமையாக இருக்கும். அதைப் பயன்படுத்தி இசை அமைக்க முடியும். இப்படியானல் ‘ஈரம்’ படம் மூலம் தண்ணீரில் ஆத்மாவை பயணிக்க வைத்து பார்வையாளர்களை அலற வைத்த இயக்குநர் அறிவழகன், சப்தம் என்றொரு படத்தில் சப்தங்கள் மூலம் ஆவிகளை பயணிக்க வைத்திருக்கிறார். அதாவதுஆன்மாக்களின் உணர்வுகளை சப்தங்கள் மூலம் வெளிக்காட்டி, அதன் மூலம் பார்வையாளர்களுக்கு பயம் காட்ட முயற்சித்திருக்கும் அறிவழகன், குறிப்பிட ஒரு காட்சியில் சில நொடிகள் வெறும் சப்தத்தை வைத்தே படம் பார்ப்பவர்களை மிரள வைக்க முயன்று கோட்டை விட்டு இருக்கிறார்.
அதாவது மெடிக்கல் காலேஜ் ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால் அந்த காலேஜி ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதாக தகவல் பரவுவதை தொடர்ந்து அங்கு உண்மையிலேயே அமானுஷ்யம் இருக்கிறதா? அல்லது கட்டுக்கதையா? என்பதை கண்டுபிடிப்பதற்காக காலேஜ் மேனேஜ்மெண்ட் அமானுஷ்யங்கள் பற்றிய ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளும் ஹீரோ ஆதியை மும்பையில் இருந்து வரவைக்கிறது. அதன்படி மெடிக்கல் காலேஜி நடந்த மர்ம மரணங்களின் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆதி சில அதிர்ச்சிகரமான தகவல்களை கண்டுபிடிப்பதோடு, அந்த கல்லூரியின் பேராசிரியரும், மேற்படிப்பு மாணவியுமான லட்சுமி மேனனை ஒரு குறிப்பிட்ட அமானுஷ்யம் பின்தொடர்வதை கண்டுபிடிக்கிறார். அது யார்? என்பதை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் ஆதிக்கு அந்த இடத்தில் ஒரு அமானுஷ்யம் மட்டும் இல்லை கிட்டத்தட்ட 42 ஆன்மாக்கள் இருப்பது தெரிய வருகிறது. அந்த 42 பேர் யார்? அவர்களின் வாழ்க்கைக்கும், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ச் மர்ம மரணத்திற்கும் என்ன தொடர்பு? என்பதை சப்தங்கள் மூலமாகவே சொல்வது தான் ‘சப்தம்’ படக் கதை.
ஹீரோ ஆதி ‘பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்’ கேரக்டரில் அறிமுகம் செய்யும் போதே தங்கள் பணி குறித்தும் ஓரிடத்தில் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டத்தை எப்படிக் கண்ட அறிகிறோம், சபதங்கள் மூல, அவற்றுடன் எவ்வாறு உரையாடுகிறார்கள், அவை வெளிப்படுத்தும் ஒலிகளை எவ்வாறு டீகோட் செய்கிறார்கள் என்பதை எல்லாம் ரூபன் ரோலில் வந்து நம்பகமான நடிப்பைத் தந்து அசத்தி விடுகிறார் . குறிப்பாக அந்த ஆராய்ச்சியாளராகவே மாறி ஆவிகளுடன் நைசாக பேசி அவைகளை கட்டுப்படுத்துவது, அவற்றின் நிறைவேறாத ஆசைகளை கேட்டு அதற்கேற்ற நிவாரணங்கள் தருவது, காலேஜ் ஸ்டாப்பான லட்சுமி மேனனை நெருக்கி விசாரித்தப்படியே மலரும் லவ்வுக்கு முந்தைய ஸ்டேஜ் என தன் ரோலில் வலுவைச் சரியாக புரிந்து ஸ்கோர் செய்யவும் ஆதி தவறவில்லை.
ஹீரோ ஆவியின் பின்னணி குறித்து கண்டுபிடிப்பவராக இருந்தால், நாயகி நிச்சயமாக ஆவியால் பாதிக்கப்படவராகதானே இருக்க முடியும். அந்த நாயகி ரோலில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். வழக்கமான வேடமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து லைக் வாங்கி விடுகிறார்.சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் ஆகியோர் திரைக்கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அனைவரும் இரண்டாம் பாதியில் ஒரே சமயத்தில் கதைக்குள் நுழைவதால் அவர்களின் தாக்கம் படத்தில் பெரிதாக இல்லை. ஆனாலும், அவர்களது திரை இருப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
படத்தின் கதைக்கு ஏற்ற இசையை வழங்க்கி சப்தத்திற்கு பெரும் துணை புரிந்திருக்கிறார் மியூசிக் டைர்கடர் தமன்.எஸ். கூட வெவ்வேறு உயிர்களின் இசை தொகுப்பை சப்தமாக மாற்றி காதுக்குள் ரீங்காரமிடச் செய்திருப்பது புதிய அனுபவம். ஆர்ட் டைரக்டர் மனோஜ் குமாரின் பங்க்களிப்பு பலே சொல்ல வைத்து விடுகிறது.கேமராமேன் அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு வித்தியாசமான கலர் டோனை காட்சிகளில் பிரதிபலிப்பது கண்களுக்குள் காட்சிகளை பதிய வைக்கிறது.
இப்படி புது கான்செப்ட்டுடன் பக்கா புரொபெஷனல் டீமும் களமிறங்கிய டைரக்டர் அறிவழகன் திரைக்கதையில் முழு அக்கறை காட்டாதததால் சப்தம் சரியாக கேட்கவில்லை.அதிலும் இரண்டாம் பாதியில் ஒலிக்கும் சப்தம் மற்றும் வழக்கமான பிளாஷ்பேக் எல்லாம் முதல் பாதி வாங்கிய மார்க்கை திரும்பி வாங்க வைத்து விடுவதுதான் சோகம்
மார்க் 2.75