தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சபரிமலை:கோயிலில் முதியோர் & குழந்தைகளுக்கு தனிப்பாதை!.

08:11 PM Nov 19, 2024 IST | admin
Advertisement

பரிமலை ஐயப்பன் கோயில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், உடனடி தரிசனம் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 18ம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், முதியோர், குழந்தைகளை கை தூக்கி விடுவதற்கும் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் மேற்கொள்வதற்காக சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இவர்கள் 18ம் படி ஏறியவுடன் நேரிடையாக தரிசனத்துக்குச் செல்லலாம். இவர்களுடன் உதவிக்கு கூடுதலாக ஒருவர் செல்லலாம். இந்த வசதியால் முதியவர்களும், குழந்தைகளும் சிரமமின்றி விரைவாக ஐயப்பனை தரிசனம் செய்யலாம்.

Advertisement

இது குறித்து தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், ''பொதுவாக கூட்டம் இல்லாத நேரங்களில் 18ம் படி ஏறி வரும் பக்தர்கள் கொடிமரத்தை வணங்கி நேரடியாக மூலஸ்தானம் முன்பு செல்லலாம். தற்போது நெரிசல் அதிகரித்துள்ளதால் முதியோர் மற்றும் குழந்தைகள் மட்டும் இப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் இரும்பு மேம்பாலம் வழியே சன்னிதானத்தின் பின் பகுதி, பக்கவாட்டு பகுதிகளின் வழியே சென்று மீண்டும் மூலஸ்தான பாதை மூலம் தரிசனம் செய்யலாம்'' என்றார்.

Tags :
ஐயப்பன்கோயில்சபரிமலைசிறுவர்முதியோர்
Advertisement
Next Article