தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சபரிமலை: தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசன செய்ய அனுமதி!

12:36 PM Oct 18, 2024 IST | admin
Advertisement

பரிமலையில் கடந்த ஆண்டு மகர விளக்கு பூஜையின் போது கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்கள். இதனை சரி செய்யும் விதமாக நடப்பாண்டு கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கான மகர விளக்கு பூஜை காலத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில், சபரிமலை மகர விளக்கு பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பம்பை, நிலக்கல் மற்றும் எரிமேலி ஆகிய பகுதிகளில் உள்ள தேவசம் போர்டுக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக முன்பதிவு செய்ய அனுமதிப்பது குறித்தும் மாநில அரசு தேவசம் போர்டுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 2024-2025 ஆம் ஆண்டுக்கான சபரிமலை மேல் சாந்தியாக கொல்லம் பகுதியை சேர்ந்த அருண்குமார் நம்பூதிரி என்பவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

மேலும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று காலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5 நாள் நடைபெறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு கோவில் நடை 21-ந்தேதி இரவு அடைக்கப்படும்.

Advertisement

இந்தநிலையில், சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சீசன் நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விபத்தில் மரணம் அடைய நேரிட்டால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையினை காப்பீட்டு நிறுவனத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் செலுத்தும். விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவு தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினசரி கூலி தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
dharsanamsabarimalaஐயப்பன்சபரிமலைதரிசனம்பக்தர்கள்
Advertisement
Next Article