ரஷ்ய அதிபர் தேர்தல் : மார்ச் 17ம் தேதி நடைபெறும்!
ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 71 வயதான புடின் இதுவரை 4 முறை தொடர்ந்து அதிபர் பதவியில் உள்ளார். அவர் 5வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் அடுத்த 2 முறை அதிபர் தேர்தலில் போட்டியிட சட்டத்திருத்தம் பெற்றுள்ளார். இதன் மூலம் 2036 வரை புடின் அதிபராக நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் கடந்த 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு விளாடிமிர் புதின் அதிகாரபூர்வ அதிபராக பொறுப்பேற்றார். அதிலிருந்து நான்கு முறை அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவரது பதவி காலம் 2024-ல் நிறைவடைகிறது. இந்நிலையில் ரஷ்ய பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் ரஷ்ய அதிபர் தேர்தலை 2024ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி நடத்துவது என முடிவு செய்து சபை தலைவர் வேலண்டினா மேட்டிவியங்கோ தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானம் மீது பெடரேசன் கவுன்சில் உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கூட்டத்தில், செனட்டர்கள் ஒருமனதாக தேதியை அங்கீகரித்தனர். அதையடுத்து அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்கான நடைமுறைகள் தொடங்கும் என்று தலைவர் வேலண்டினா மேட்டிவியங்கோ தெரிவித்தார். இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 162 பேர் வாக்களித்தனர். பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
71 வயதான புதின் 5வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் அடுத்த 2 முறை அதிபர் தேர்தலில் போட்டியிட சட்டத்திருத்தம் பெற்றுள்ளார். இதன் மூலம் 2036 வரை புதின் அதிபராக நீடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஆனால் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி விளாடிமிர் புதின் இன்னும் அறிவிக்கவில்லை ரஷ்ய அதிபர் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.