For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா இலவசமாக வழங்க முடிவு!

08:03 PM Dec 19, 2024 IST | admin
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா இலவசமாக வழங்க முடிவு
Advertisement

ம் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் பதிவாகின்றனர்.

Advertisement

ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளதுடன், அதனை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். மருத்துவத்தில் பல தொழில்நுட்பங்கள் வந்தபோதிலும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது சிக்கலாகவே இருந்து வந்தது.

Advertisement

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

இலவசமாக வழங்க முடிவு

இந்நிலையில், அனைத்து ஆய்வுகளும் முடிந்து, புற்றுநோய்கான தடுப்பூசியை எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையில் உருவாக்கி உள்ளதாவும் ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும் கேன்சர் நோயை குணப்படுத்தும் இந்த தடுப்பூசியை 2025 முதல் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின், இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

தடுப்பூசி அல்லது தனிப்பயனாக்கப்பட்ட mRNA, கணித அடிப்படையில் மேட்ரிக்ஸ் முறைகளைப் பயன்படுத்துவதால், தற்போது தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. AI மற்றும் நியூரல் நெட்வொர்க் கம்ப்யூட்டிங் உதவியுடன், இந்த நடைமுறைகளை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்தில் உருவாக்கி விடலாம் என்று ரஷ்யாவின் தடுப்பூசி தலைவர் கூறினார். விரைவில் கேன்சர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

Advertisement