தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

RSS, சங்க் பரிவார், பாஜகவினர் வசம் சென்ற 62% சைனிக் பள்ளிகள்!

08:29 PM Apr 04, 2024 IST | admin
Advertisement

மோடி அரசின் சைனிக் பள்ளிகள் எனப்படும் ராணுவ பள்ளிகள் இந்திய ராணுவத்தில் சேருவதற்கு மாணவர்களை தயார்படுத்துவதை பிரத்யேக நோக்கமாக கொண்டுள்ளன. நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் மேலும் 100 சைனிக் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் நிறுவ ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி 2022 முதல் 2023 வரை தனியார் பங்களிப்போடு, 40 புதிய ராணுவப் பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதில் 62% பள்ளிகள் ஆர்எஸ்எஸ், சங்க் பரிவார் மற்றும் பாஜகவை சார்ந்த தனி நபர்கள் அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. ஆனால் கிருஸ்தவ, இஸ்லாமிய அமைப்பின் கீழ் செயல்படும் இந்தியாவின் எந்தஒரு மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை சைனிக் பள்ளிகளை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற தகவ்ல் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கப்பட்ட சைனிக் பள்ளிகள், இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேருவதற்கு தயார்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. 1961 ஆம் ஆண்டு மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகத்தால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிராந்திய, சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளை இந்திய ராணுவத்தில் இருந்து களையும் முயற்சியாக இவை தொடங்கப்பட்டன. சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல்ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாடமி அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவது பள்ளியின் நோக்கமாகும். தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

Advertisement

இத்தகைய பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக, சைனிக் பள்ளிகள் சங்கம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பின் வலிமையைப் பொறுத்து 50% கட்டணத்தை வழங்குகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பயிற்சி மானியமாக வழங்கப்படும். கடந்த 2021இல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய மத்திய அரசு, தனியார் பங்களிப்போடு நாடு முழுவதும் மேலும் 100 புதிய சைனிக் ராணுவப் பள்ளிகள் அமைக்க திட்டமிட்டது.

அந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 40 தனியார் பள்ளிகளுடன் சைனிக் பள்ளிகளை அமைக்க மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில் சுமார் 62 சதவீத தனியார் சைனிக் பள்ளிகள் சங்பரிவார், பாஜக நிர்வாகிகள், மற்றும் பிற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது என தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, 40 புதிய சைனிக் பள்ளிகளில், 10 பள்ளிகள் பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமானவை என்றும் 8 பள்ளிகள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கும், 6 பள்ளிகள் பிற இந்து அமைப்பினருக்கும் வழங்கியிருப்பதாக ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி கிறிஸ்தவ, இஸ்லாம் அமைப்பின் கீழ் செயல்படும் இந்தியாவின் எந்தவொரு மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை சைனிக் பள்ளிகளை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பள்ளிகள் பெரும்பாலும் குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவை. இதனால் விமர்சனம் எழுந்துள்ளது.

Tags :
ArmyBjpEducatationRSSSainik schools!Sangh Parivarschoolstook over 62%
Advertisement
Next Article