தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு 3 மாவட்டங்களில் மட்டும் அனுமதியில்லை.! ஐகோர்ட் ஆர்டர்!

08:11 PM Oct 18, 2023 IST | admin
Advertisement

கொஞ்சம் ஆக்ரோஷம் கொண்ட இந்துத்துவா அமைப்பான RSS அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு தமிழக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். பின்னர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, RSS அமைப்பினர், சென்னை உயர்நீதிமன்றம் கடந்து உச்சநீதிமன்றம் வரையில் வழக்கு நடத்தி, இறுதியில் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பின்படி, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் RSS பேரணி நடத்தப்பட்டது.தற்போது அதே போல தென் மாவட்டங்களில் 20 மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், காவல்துறை பதில் அளிக்காத காரணத்தால் RSS அமைப்பு இந்த முறை மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடியது. ஆனால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து விட்டது.

Advertisement

அதாவது இந்தியா விடுதலை அடைந்ததன் 75 ஆண்டு கொண்டாட்டம், அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக விஜயதசமி நாளான வரும் அக்டோபர் 24ம் அன்று தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 14ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

கடந்த 3 நாட்களாக இந்த மனுவின் மீது அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து விரிவான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பசும்பொன் தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் உள்ளதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறையால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர முடியாது என்றும் மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் பேரணியை நடத்திக் கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Tags :
Bjphighcout maduraiRSSRSS Rally
Advertisement
Next Article