For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சைபர் கிரைம் மோசடி கும்பல்களால் கடந்த 10 மாதங்களில் ரூ.2,140 கோடி இழப்பு - மத்திய அரசு தகவல்

06:38 PM Nov 03, 2024 IST | admin
சைபர் கிரைம் மோசடி கும்பல்களால் கடந்த 10 மாதங்களில் ரூ 2 140 கோடி இழப்பு   மத்திய அரசு தகவல்
Advertisement

லத்தரப்பட்ட டிஜிட்டல் மோசடி கும்பல்கள், பொதுமக்களிடம் பல்வேறு வகையில் மிரட்டி, பணம் பறித்து வருகின்றனர். இந்த நிலையில், நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 92,334 -க்கும் மேற்பட்ட டிஜிட்டல் மோசடிகள் நடந்துள்ளன.அப்பாவி பொதுமக்களின் மீது பொய்ப் புகார்களைக் கூறி, பணம் கொடுக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி, கொள்ளை சம்பவங்களில் மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருவதாக ஒன்றிய வெளியுறவுத் துறையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

மோசடி கும்பல்கள் கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும், குறிப்பாக கம்போடியா நாட்டில் உள்ள சீனாவுக்கு சொந்தமான சூதாட்ட விடுதிகளில் இருந்துதான் அதிகளவிலான மோசடி நடப்பதாகக் கூறுகின்றனர்.இவர்கள் தங்களை காவல்துறை அதிகாரி, அமலாக்க இயக்குநரகம், சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்ற உயர்மட்ட இந்திய நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல காட்டிக் கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மாதத்திற்கு சுமார் ரூ. 214 கோடி மோசடி நடப்பதன் மூலம், கடந்த 10 மாதங்களில் ரூ. 2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சைபர் பிரிவு தெரிவிக்கிறது.

Advertisement

இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தாலோ, சந்தேகத்துக்கிடமான அழைப்புகளைப் பெற்றாலோ, உடனடியாக 1930 அவசரகால ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். உடனடியாக தெரிவிப்பதன் மூலம், இழந்த பணத்தினை உடனடியாக பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

Tags :
Advertisement