தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வாபஸ் பெறப்படாத 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லும் - ரிசர்வ் வங்கி தகவல்!

05:44 PM Jan 02, 2024 IST | admin
Advertisement

டந்த 2016ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப் படுத்தப்ட்டன. அதன் பின்னர் ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

ஆனாலும் மாற்றப்படாத ரூ.2000 நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் தெரிவித்துள்ளது.அவற்றை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து, ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் , ''வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, 97.38 சதவீத நோட்டுகள், வங்கிக்கு திரும்பி விட்டன. மீதி ரூ.9 ஆயிரத்து 330 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. அவை தொடர்ந்து செல்லுபடி ஆகும்.அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது எந்த தபால் நிலையத்தில் இருந்தும் ‘இந்தியா போஸ்ட்’ மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.'' என்று அதில் கூறப்பட்டுள்ளது

Tags :
2000 noterbi
Advertisement
Next Article