For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ரூ.2,000 நோட்டுகளை தபால் அனுப்பி மாற்றிக் கொள்ளலாம்: ரிசா்வ் பேங்க்

12:02 PM Nov 04, 2023 IST | admin
ரூ 2 000 நோட்டுகளை தபால் அனுப்பி மாற்றிக் கொள்ளலாம்  ரிசா்வ் பேங்க்
Advertisement

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மே மாதம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் மக்கள் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.ஆரம்பத்தில், ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2023 ஆனால் பின்னர் அது அக்டோபர் 7, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது, ரிசர்வ் வங்கியைத் தவிர வேறு எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை (RBI ). மக்கள் 2000 ரூபாயை மாற்றிக்கொள்ளும் வசதியை இன்னும் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

அந்த 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அகமதாபாத், பெங்களூர், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ளன.. இதற்கு எவ்வித கால அவகாசமும் தற்போது வரை விதிக்கப்படவில்லை.

Advertisement

இதுவரை ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டு இருக்கின்றன. 97 சதவீதத்திற்கும் நோட்டுகள் திரும்ப கிடைத்து இருக்கின்றன. ரூ.10,000 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் ரிசா்வ் வங்கி கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதைத் தவிா்க்கும் பொருட்டு, தபால் வழியாக ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தொகையை தங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்துள்ளது.

Tags :
Advertisement