For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முதலீட்டை ஈர்க்க மோசடி செய்த டிரம்ப்க்கு ரூ.2.94 ஆயிரம் கோடி அபராதம் : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!!

05:18 PM Feb 17, 2024 IST | admin
முதலீட்டை ஈர்க்க மோசடி செய்த டிரம்ப்க்கு ரூ 2 94 ஆயிரம் கோடி அபராதம்   அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
Advertisement

சொத்து விவரங்களில் மோசடி செய்ததாக டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதால் டிரம்ப் நிறுவனம் ரூ.2.94 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அந்நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட டிரம்பிற்கு 3 ஆண்டுகள் தடை விதித்தார். அதேபோல், அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப்பும் 4 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தவும், நிறுவனங்களின் இயக்குநர்களாக செயல்பட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement

அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய முன்னாள் அதிபராக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டது மற்றும் பதவிக்காலத்தின் போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் கடந்த 2013ம் ஆண்டு தனது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தனது சொத்து மதிப்பை 3.6 பில்லியன் டாலர்கள் என விளம்பரப்படுத்தியுள்ளார்.

Advertisement

இதன் மூலம் அவர் பல மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு எனவும், இதன் மூலம் அவர் பல மில்லியன் டாலர்கள் வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான பல்வேறு வழக்குகளில் கடந்த 2022ம் ஆண்டு ட்ரம்ப் ஆர்கனைசேஷன் மீது நிதி முறைகேடு வழக்கில் தவறிழைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நியூயார்க் நீதிமன்றம், டொனால்ட் டிரம்பிற்கு 354.9 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகரில் உள்ள எந்த நிறுவனத்திலும் தலைவராகவோ இயக்குனராகவோ இயங்குவதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப போட்டியிட முனைப்பு காட்டி வரும் நிலையில், இந்த தீர்ப்பு அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement