‘ரூட் நம்பர் 17’ -பட விமர்சனம்!
இந்த படத்திற்காக அனைவரும் கடும் உழைப்பை போட்டுள்ளனர் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரிகிறது. குறிப்பாக சாக்லேட் பாய் கேரக்டர்களில் மட்டுமே அதிகம வந்தஜித்தன் ரமேஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தில் மாறுபட்ட ஒரு வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார் அவரது தலைவிரி கோலமும், அழுக்கு நிரம்பிய ஆடையும் பயமுறுத்தவே செய்கிறது. முன்னதாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் 55 டிகிரி செல்சியஸில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக டைரக்டர் குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தின் முதல் பாதி அதிரடியாக சென்றாலும், இரண்டாம் பாதி சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. ஜாக்கி ஜான்சனின் சண்டைக் காட்சிகள் அடடே சொல்ல வைக்கிறது. ஆனால் படத்தில் வரும் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் வருவதால் படத்துடன் நம்மை ஒன்ற விடாமல் செய்கிறது. ஒவ்வொரு கேரக்டருக்குகும் இன்னும் டீடைலிங் செய்திருக்கலாம்.
கதை என்னவென்றால் எக்ஸ் மினிஸ்டர் ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக் தனது காதலி அஞ்சுவுடன் காட்டுப்பகுதிக்கு செல்கிறார். அப்போது அந்த ஜோடியை கடத்தும் ஜித்தன் ரமேஷ், அதே பகுதியில் இருக்கும் ஒரு பாதாள அறையில் வைத்து அவர்களை கொடுமை படுத்துகிறார். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்க, அந்த காட்டுப் பகுதியில் இதுபோல் பல மர்ம சம்பவங்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது. அந்த சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் யார்?, எதற்காக இப்படி செய்கிறார்? என்பது தான் ‘ரூட் நம்பர் 17’ படத்தின் மீதிக்கதை.
முன்னரே சொன்னது போல் ஹீரோவாக சைக்கோத்தனமான வில்லனாக நடித்திருக்கும் ஜித்தேன் ரமேஷ், காட்டுப் பகுதியில் வாழ்ந்தாலும், உடை, காலணி போன்றவற்றின் மூலம் ஏதோ நகர்ப்புறத்தில் வாழ்பவராகவே வருகிறார். அதிகம் பேசாமல் நடிப்பிலேயே பார்வையாளர்களை பயமுறுத்த முயற்சித்திருப்பவர் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சைக்கோத்தனமான வில்லனாக நடித்திருப்பவர், பிளாஷ்பேக்கில் வேறு ஒரு லுக்கில் நடித்து கவனம் பெறுகிறார்.
காதல் ஜோடியாக நடித்திருக்கும் கார்த்திக் மற்றும் அஞ்சு, வில்லனாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் டாக்டர்.அமர் ராமச்சந்திரன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அருவி மதன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அஞ்சு படம் முழுவதும் அழுக்கு படிந்த உடலோடு நடித்திருப்பதோடு, விழுவது, ஓடுவது, அடிவாங்குவது என்று அதிகம் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.
ஆனால் சிறுவயதில் காட்டுக்குள் சென்ற நாயகன் ரமேஷ் தன் பெற்றோரை கொன்றவர்களை பழிவாங்கும் அளவுக்கு வளரும் வரை காட்டிலேயே எப்படி வளர்ந்தார், அவருக்கு எப்படி தன்னுடைய பள்ளி புத்தகங்கள் கிடைத்தன, சுரங்கத்தில் கொளுத்தி வைக்க மெழுகு வர்த்திகள் எப்படி கிடைத்தன என்பன போன்ற சில கேள்வி களுக்கு சரியான பதில் இல்லை. அது போல் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஜித்தன் ரமேஷுக்கு உதவி செய்தது போல விசாரணையில் ஒரு சில வசனங்கள் மூலம் மேற்குறிப்பிட்ட லாஜிக் மிஸ்ஸிங் கை சமாளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில்இந்த ‘ரூட் நம்பர் 17’ பயணித்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் ஓரளவு ரசிக்க வைக்கிறது
மார்க் 2.5/5