For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ரொனால்டோவின் யூடியூப் சேனல் சாதனை!

06:12 PM Aug 22, 2024 IST | admin
ரொனால்டோவின் யூடியூப் சேனல் சாதனை
Advertisement

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ரசிகர்களும், ஃபேஸ்புக்கில் 170 மில்லியன் ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். ரொனால்டோ பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்.

Advertisement

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்

Advertisement

தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகாலத்தில் இருக்கிறார் ரொனால்டோ. இந்நிலையில் இப்போது அவர் யுடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம் அவர் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கவுள்ளார்.

“UR christiano” என்ற பெயரில் சேனல் தொடங்கிய அவர் அடுத்தடுத்து சில வீடியோக்களை பதிவேற்றினார். இந்நிலையில் அவர் சேனல் ஆரம்பித்த 90 நிமிடங்களில் அவரை ஒரு மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். அதன் மூலம் சேனல் ஆரம்பித்த ஒன்றரை மணிநேரத்தில் யூடியூபின் கோல்டன் பட்டனை அவர் பெற்றுள்ளார். அதன் பின்னர் 12 மணி நேரத்தில் அவர் சேனலின் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement