தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மணிப்பூரில் ராக்கெட் குண்டு தாக்குதல்:5 பேர் பலி.!

05:55 PM Sep 07, 2024 IST | admin
Advertisement

டந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இரு குழுக்களிடைய மோதல் நடந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு படையினர் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவ்வப்போது நடக்கும் தாக்குதல்களால் இன்னமும் அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பிஷ்ணுபூர், மொய்ராங்கில் குகி தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்டில் முன்னாள் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங்கின் வீட்டில் மதச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்த 78 வயது முதியவர் கொல்லப்பட்டார்

Advertisement

இந்த கலவரத்தில் 5 பேர் தற்போது பலியாகினர். அதன்படி, ஜிரிபாம் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. மேலும் 4 பேர் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

Advertisement

கடந்த ஒரு வாரத்தில் மெய்தெய் பகுதிகளில் நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். அந்த 4 பேரும் அப்பகுதியில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் அருகிலுள்ள இரண்டு இடங்களில் மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசுவதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதை அடுத்து இந்த ராக்கெட் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதன் காரணமாக, பள்ளிகளை மூடுவதாக மணிப்பூர் அரசு அறிவித்தது. அமைதியை மீட்டெடுக்கவும், தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தடுக்கவும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மெய்தெய் மற்றும் ஹ்மார் பிரதிநிதிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்ட போதிலும, தற்பொழுது இந்த வன்முறை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நேற்று பின்னிரவில் போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், “குகி போராட்டக்காரர்கள் நீண்ட தூரம் தாக்கும் வகையிலான ராக்கெட்டை பயன்படுத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட ராக்கெட் குறைந்தது நான்கு அடிகள் உள்ளது. துரு பிடிக்காத வகையில் துத்தநாகம் பூசப்பட்ட (galvanised) இரும்புக்குழாயில் வெடிமருந்துகளை நிரப்பி, அதனை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரில் வைத்து சுடப்பட்டுள்ளது. ராக்கெட் அதிக தூரம் செல்வதற்கு போராட்டக்கார்கள் அதில் வெடிமருந்துகளின் அளவினை மாற்ற வேண்டும். அமைதியாக இருந்த மாதங்களில் அவர்கள் அதற்கு பயிற்சி பெற்றுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags :
Bishnupurformer chief ministerJiribam DistrictKukiManipurMeiteiMilitantsrocket attackகலவரம்மணிப்பூர்
Advertisement
Next Article