தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துநர்களுக்கு பரிசு!

09:19 AM Jul 04, 2024 IST | admin
Advertisement

மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பாரத் ஸ்டேட் வங்கி உடன் இணைந்து மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலமாக பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.  இந்த திட்டத்தினால் இனி பேருந்துகளில் பயணச்சீட்டு ( Electronic Ticketing Machine) மூலம்  வழங்கப்படும்.

Advertisement

பேருந்து நடத்துநர்கள் Electronic Ticketing Machine வாயிலாக பயணிகளிடம் பணம், CARD மற்றும் UPI மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எஸ்.இ.டி.சி பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது.

Advertisement

தற்போது ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும். நடத்துநர் களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு.

Tags :
Conductorsdigital transactionsrewardSETCwho promote
Advertisement
Next Article