For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 டூ குரூப் 4 வரையிலான பல்வேறு தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட காலஅட்டவணை & தேர்வு தேதி அறிவிப்பு!

08:45 PM Apr 24, 2024 IST | admin
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 டூ குரூப் 4 வரையிலான பல்வேறு தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட காலஅட்டவணை   தேர்வு தேதி அறிவிப்பு
Advertisement

மிழகத்தில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வு உள்பட பல்வேறு தேர்வுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை வெளியிட்டுள்ளது.

Advertisement

90 பணியிடங்களுக்கான குரூப் 1-ன் முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B and குரூப் 1-C தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது. கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது என்று திருத்தப்பட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Advertisement

2,030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு செப் .28-ம் தேதி நடைபெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஏஎஸ்ஓ, முனிசிபல் நிர்வாகம் உள்பட தற்போது குரூப் 2 ஏவில் இருந்த பணியிடங்கள் மீண்டும் குரூப் 2 பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

105 பணியிடங்களுக்கான தொழில்நுட்ப சேவைகள் தேர்வு(பட்டப்படிப்பு தரம்) ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறும். 730 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு டிப்ளமோ / ஐடிஐ நிலைக்கு நவம்பர் 11ம் தேதி தேர்வு நடைபெறும். 50 பணியிடங்களுக்கான உதவி அரசு வழக்கறிஞர்களுக்கு டிசம்பர் 14ம் தேதி தேர்வு நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சியில் நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம். அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடப்பாண்டில் சுமார் 10,000 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

ஆனாலும் இந்தத் திட்டமிடல் தற்காலிகமானது மற்றும் தேர்வர்கள் தங்களைத் தேர்வுக்குத் தயார்படுத்திக்கொள்ள இது வெளியிடப்பட்டுள்ளது. பிளானரில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளில் சேர்த்தல் அல்லது நீக்குதல் இருக்கலாம். சுட்டிக்காட்டப்பட்ட காலியிடங்கள் தேர்வுக்கு முன் அல்லது பின் மாற்றத்திற்கு பொறுப்பாகும். பாடத்திட்டம் ஆணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in இல் கிடைக்கிறது, இது தேதி வரை மாற்றத்திற்கு உட்பட்டது.

Tags :
Advertisement