தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை- ஐகோர்ட்!

07:32 PM Feb 01, 2024 IST | admin
Advertisement

மிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஜாதி மதம் வைத்து தான் அனைத்தையும் பார்க்கிறார்கள். அரசியல் முதல் சாமானிய மக்கள் அலுவலகம் வரை ஜாதி மதம் என்ற நிலை தற்போது உள்ளது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வேலூர் மாவட்டம் சிநேகா என்ற பெண் ஜாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை முதன் முதலில் வாங்கினார். அவர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் இந்த சான்றிதழை வாங்கினார். இதற்காக அவர் 10 ஆண்டுகள் போராடி இருக்கிறார்.

Advertisement

சாதி, மத ஒழிப்பு குறித்த உரையாடல்கள் எழும்போதெல்லாம் , `சாதிச் சான்றிதழ்களில் சாதியற்றவர்களாகக் குறிப்பிட்டாலே சாதி ஒழியும்' என்ற கருத்தும் முன்வைக்கப்படும்'. ஆனால், அது சரியான தீர்வு அல்ல. மக்களின் மனமாற்றமே முழுமையான தீர்வாக அமையும் என்றும் சிலர் கருதினாலும், சாதி, மத அடையாளமற்றவர்களாகப் பதிவு செய்வதைப் பலரும் வரவேற்கவே செய்கிறார்கள். இந்நிலையில் சாதி மதமற்றவர் சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது என்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது..

Advertisement

திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்..!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், “சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் வழங்கிட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது.அரசின் பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.. சாதி மதமற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது. இத்தகைய சான்றிதழ் வழங்குவது சொத்து, வாரிசுரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றில் தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்தும் போது கடும் விளைவுகளை ஏற்படுத்தும், எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும்.கல்வி நிலைய விண்ணப்பங்களில் சாதி, மதம் தொடர்பான இடத்தை பூர்த்தி செய்ய விரும்பாதவர்கள் அந்த பகுதிகளை அப்படியே விட்டு விடலாம். எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்,” என்று தெரிவித்தார்..

Tags :
certificateshighcourtissueno authoritynon-caste and religionRevenue officials
Advertisement
Next Article