தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வங்கிகள், நிதிநிறுவனங்களுக்கு ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை!

10:23 AM Apr 30, 2024 IST | admin
Advertisement

ன்று வரை அன்றாட பொழுதை நகர்த்தவே நடுத்தர மற்றும் ஏழை மக்கள் நகைகளை அடமானம் வைத்தோ அல்லது கந்துவட்டிக்கு கடன் வாங்கியோதான் வாழ்வாதாரத்தை நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 57%-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கு நாட்களில் வங்கி மூலமாகவோ அல்லது தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் பெற்றுள்ளதாக கன்ஸ்யுமர் பிரமீட் ஹவுஸ்ஹோல்டு சர்வே (Consumer Pyramids Household Survey - CPHS) என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விரைவாக பணம் கிடைக்கும் என்பதாலும், அசல் தொகை அதிகம் என்பதாலும் தனியார் நிதி நிறுவனங்களிலும், சில அங்கரிக்கப்படாத அடகு கடைகளிலும்தான் மக்கள் கடன் வாங்குகிறார்கள். ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில், வருமானம் இழந்துள்ளதால் வட்டி பணமே கட்ட முடியாத நிலைக்கு பாமர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

இதனால் தனியார் அடகு நிறுவனங்கள் பணம் கட்ட முடியாதவர்கள் நகைகளை ஜப்தி செய்து வருகிறார்கள். அதில் பல நிதி நிறுவனங்களும், அடகு கடைக்காரர்களும் தமிழ்நாடு பணம் கொடுப்பவர்கள் சட்டம் - 1957-ஐ கடைபிடிப்பதில்லை என்ர குற்றச்சாட்டு ஓங்கி ஒலித்த நிலையில் இந்தியா முழுக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்தாரர்களிடம் வட்டி வசூலிப்பதில் சில நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதை ரிசர்வ் வங்கிக் கண்டறிந்துள்ளது. இதையடுத்து ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை நேற்று வழங்கியுள்ளது.

Advertisement

அதன்படி, ஆர்பிஐ நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை விபரம் இதோ:

'கடன் வழங்கும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்வது நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் நலனுக்காக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சில கடன் வழங்குபவர்கள் வாடிக்கையாளருக்கு கடன் தொகை சென்றடைந்த தேதியிலிருந்து வட்டி கணக்கிடாமல் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி அல்லது கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய தேதியிலிருந்து வட்டி வசூலிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் காசோலை கடன்களில் காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து வட்டி கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் காசோலை வாடிக்கையாளர்களை சென்றடைய பல நாள்களாகிறது. கடந்த 2003-ம் ஆண்டு முதலே வங்கிகள், நிதி நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.

மேலும், கடன் நிலுவையில் உள்ள நாள்களுக்கு மட்டும் வட்டி வசூலிக்காமல் அந்த மாதம் முழுவதற்கும் வட்டி வசூலிப்பது ஒரு கடன் தவணையை முன்னதாகவே பிடித்தம் செய்து கொண்டு, கடன் தொகை முழுவதற்கும் வட்டி கணக்கிடுவது போன்ற செயல்களிலும் சில நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எனவே, நியாயமற்ற முறையில் செயல்பட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கூடுதலாக வசூலித்த தொகையை வாடிக்கையாளர் கணக்கில் திரும்பச் செலுத்த வேண்டும்.’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
financialinstitutions!InterestLoans banksrbireserve bank
Advertisement
Next Article