ரிசர்வ் வங்கியில் தலைமை காப்பாளர் பணி வாய்ப்பு!
09:28 PM Jul 22, 2024 IST | admin
Advertisement
ஆர்பிஐ (RBI) வங்கி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி தலைமை காப்பாளர் பதவிகள் காலியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி | 22-07-2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12-08-2024 |
காலியிட விவரங்கள் :
Advertisement
- 1- தலைமை காப்பாளர் (Chief Archivist )
கல்வி தகுதி :
தலைமை காப்பாளர் (Chief Archivist ) | 50% மதிப்பெண்களுடன் நவீன இந்திய வரலாற்றில் முதுகலை பட்டம் (PG Degree in Modern Indian History) / சமூக அறிவியல் (Social Science) துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
அல்லது பிஜி டிப்ளமோ (PG Diploma) / டிப்ளமோ (Diploma) / இளங்கலை காப்பக ஆய்வுகள் (Bachelor Archival Studies) / பதிவுகள் மேலாண்மை (Records Management) / காப்பக மேலாண்மை (Archives Management) |
சம்பளம் :
- ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த தலைமை காப்பாளர் வேலைக்கான மாத ஊதியமாக ரூ.1,10,050/- வழங்கப்படும்.
வயது வரம்பு :
- இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- ST / SC / OBC / EWS பிரிவினருக்கு அரசாங்க விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தேர்தெடுக்கும் முறை :
- இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை நேர்காணல் (Interview) மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி சேவைகள் வாரியம், 3-வது தளம், ஆர்பிஐ கட்டிடம், எதிர் மும்பை மத்திய ரயில் நிலையம், பைகுல்லா, மும்பை – 400008 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
- இந்த பணிக்காக விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4468 பார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அல்லது இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த படிவத்தை நன்கு சரிபார்த்து, சரியாக பூரித்து செய்ய வேண்டும்.
- அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- குறிப்பு : – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.