For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

யாராவது கல்வி உதவி என்று கேட்டால் உதவி செய்யுங்கள்!

07:17 AM Jul 26, 2024 IST | admin
யாராவது கல்வி உதவி என்று கேட்டால் உதவி செய்யுங்கள்
Advertisement

திரைக்கலைஞர் சிவகுமார் , தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 44 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 45-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் வைத்து நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் மாயா (G.R.மகாதேவன்) அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் K. கம்மாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. பிரகாஷ் அவர்களின் பெண் கல்வி குறித்த அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி கிளையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சங்கர் அவர்களின் அர்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும் கெளரவிக்கப்பட்டனர்.

Advertisement

மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், “1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 25 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’என்று கூறினார்.

Advertisement

நிகழ்வில் பேராசிரியர் கல்யாணி பேசும் பொழுது, அகரம் பவுண்டேஷன் ஒரு வழிகாட்டி பல்கலைகழகமா திகழ்கிறது. பல்வேறு துறைகளில் நிறைய மாணவர்கள் இலவசமாக கல்வி பயில வழிகாட்டி வருகிறது. தொடர்ந்து தாய் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சியிலும் அகரத்திற்கு பங்கு இருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படிருப்பது போன்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகள் இருக்கும் இடங்களில் அரசுப் பள்ளிகள் தொடங்கப்படுவதில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பகுதி உதவி பெறும் பள்ளிகள் மிகுந்த நிதி சுமைகளுக்கு மத்தியிலேயே கூடுதல் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். உதாரணமாக ஐந்தாம் வகுப்பு வரை அரசின் உதவி இருக்கும், ஆனால் அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படிப்பார்கள். அந்த 6, 7, 8 அரசு உதவி கிடைப்பதில்லை. அது போன்ற பகுதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்நாடு முழுவதும் 47,000 மாணவர்கள் படிக்கின்றார்கள். தமிழ்நாடு அரசின் கல்வி பட்ஜெட்டில் .25 % ஒதுக்கினாலே, பகுதி நேர உதவி பெறும் பள்ளிகளுக்கு முழு உதவி வழங்கிட முடியும். ஆங்கில வழி படிக்கும் மோகம் அதிகரித்து இருக்கும் இன்றைய நாட்களில், தாய் தமிழ்ப் பள்ளிகளை அரசாங்கம் நிதியுதவி தந்து ஆதரிக்க வேண்டும் என்றார்.

முனைவர் விஜய அசோகன் பேசும் பொழுது, உலகளவில் STEM (Science, Technology, Engineering, Mathematics) துறைகளில் பெண்களின் பங்கு குறைவாக இருக்கிறது. இந்திய அளவிலும் மிகக் குறைவாக உள்ளது. இந்த சூழலில் ‘Women in STEM’ International Conclave நிகழ்வை கடந்த மார்ச் மாதம் அண்ணா பல்கலைகழகத்துடன் இணைந்து நடத்தினோம். மாணவிகள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவிகள் என 650 பேர் கலந்து கொண்டார்கள். அதனடிப்படையில் Policy Recommendations தயார் செய்திருக்கிறோம். அதனை அனைவரின் கவனத்திற்கும் ஊடக நண்பர்களால் வாயிலாக எடுத்து சொல்ல இருக்கிறோம். அரசாங்கத்தின் கொள்கை வடிவமைப்பாளர்களிடம் வழங்கப்பட இருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் பரிந்துரைகளில் சில, STEM என்ற கருத்தாக்கம் பள்ளி அளவிலேயே மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். Patent,, Intellectual Property குறித்த அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும். STEM Internship வாய்ப்பு, STEM துறைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, ஊக்கத்தொகை வழங்கவேண்டும். தமிழ்நாடு Research Network என்ற ஒரு குழுவை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவிகளை வழிகாட்ட வேண்டும். STEM குறித்த கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்துவது. உலகளவில் STEM துறைகளில் பணிபுரியும் தமிழ் நாட்டை சேர்ந்த பெண்களை ஓர் அணியாக ஒருங்கிணைத்து செயல்பட செய்யவேண்டும் போன்ற பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்றார்.

திரைக் கலைஞர் கார்த்தி பேசும் பொழுது, ‘’எனது இரண்டு வயசில் இருந்து இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. என்னுடைய பாட்டி சொன்னது எது செய்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற சொல்லுக்கு இணங்க இன்றளவும் எனது குடும்பத்தினர் அனைவரும் என் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். தனது தந்தையின் நூறாவது படத்தில் வந்த வருமானம் அனைத்தையும் வங்கியில் டெபாசிட் செய்து விட்டு அதில் வரும் வட்டியினை வைத்து ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திலும் மாநிலத்திலும் முதல் மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களுக்கு பரிசுத் தொகையினை வழங்கி வந்தனர் அன்றளவு ஆயிரம் ரூபாய் ஒரு சவரன் தங்கத்திற்கும் அதிகமாக இருந்தது. தொடர்ந்து 25 ஆண்டுகள் செய்து வந்த நிலையில் அதன் பின்னர் அந்நிகழ்வை அகரம் எடுத்து நடத்த ஆரம்பித்தது. முதல் மதிப்பெண் எடுப்பது மட்டும் முக்கியமல்ல எங்கிருந்து எடுக்கிறார்கள் .எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் இருந்து எடுக்கிறார்கள் என்பது முக்கியம் அதையும் அறிந்து பின்னர் அகரம் அவர்களுக்கு பரிசுத்தொகை கொடுக்க ஆரம்பித்தது. கிராமங்களில் உள்ள குழந்தைகள் சென்னை போன்ற நகரங்களில் வந்து படிக்கணும். நகரங்கள் தரும் Exposure அனுபவம் தரும். தன்னம்பிக்கை கிடைக்கும். மாணவர்கள் நாம வாழ்வில் என்ன ஆக வேண்டும் என்பதை தீர்மானித்து அதனை நோக்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் படித்தாக வேண்டும் நானும் படித்தது இன்ஜினியரிங் தான். பின்னர் எனக்கு என்ன தேவை என்பதை தேடினேன், அதை நோக்கியே பயணிக்க ஆரம்பித்தேன். அதனால் மாணவர்கள் தனக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

கல்வி ஒரு மனிதனுக்கு பெரிய ஆயுதமாக இருக்கிறது. இந்த மேடையில் மணிப்பூரில் இருந்து வந்த தங்கை பேசியது ரொம்ப வேதனையாக இருந்தது. எங்கள் ஊரில் பிரச்சினை நடக்கிறது எங்க ஊரில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதனால் நிறைய குழந்தைகள் ஸ்கூலுக்கும் கல்லூரிக்கும் போக முடியவில்லை வீட்டுக்குள்ளேயே அனைவரும் இருக்கிறோம். நான் அதிர்ஷ்டவசமாக இங்கே வந்ததுனால் படித்துக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து எங்கள் ஊருக்காக பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள். எங்கள் ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு மறுபடியும் வெளியேயும் பள்ளிக்கும், கல்லூரிக்கும் போக வழி வகுங்கள் என்று கூறினார். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு நாம் எல்லாம் அந்த சூழலை யோசிச்சு பார்க்கணும். யாராவது கல்வி உதவி என்று கேட்டால் உதவி செய்யுங்கள் பணமாக இல்லாமல் பள்ளியிலேயே போய் பணத்தை கட்டி விடுங்கள் அது நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். மாணவர்கள் தன் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்ம என்ன விஷயம் எடுத்து பண்றோம் என்பது முக்கியம் அல்ல எடுத்த செயலை தொடர்ந்து செய்யணும். இலக்கை சாரியாக அமைத்துக் கொண்டால் அதற்கான வழிகள் தானாக கிடைக்கும் என்பதனை கூறினார்.

அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா பேசியதாவது,

Sivakumar Education Trust ஆரம்பிக்கபட்டு 45 ஆண்டுகள் ஆனது. இந்த நிகழ்வை 20 வருஷம் அகரம் எடுத்து நடத்ததுகிறது. அகரம் விதை திட்டம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில், குடும்பத்தில், மாற்றத்தை உருவாக்க பலபேரோட பங்களிப்பு ரொம்ப ரொம்ப முக்கியமா இருந்து வருகிறது. விதை திட்டத்திற்கு இந்த வருடம் 15-வது ஆண்டு. கிட்டத்தட்ட 5287 மாணவர்கள் 350 மேற்பட்ட கல்லூரிகளில் படிச்சிருக்காங்க. அவங்க 12 ஆம் வகுப்பு வரைக்கும் ஒரு அரசு பள்ளியில் பயின்று அதுக்கு மேல கல்லூரி படிப்பை முடித்து அவங்க அவங்க வாழ்க்கைய வேறவேற இடத்துலே நிலைநாட்டி இருக்காங்க.3440 முன்னால் மாணவர்கள் இருக்காங்க; 1850 மாணவர்கள் படிச்சிட்டு இருக்காங்க. முக்கியமா இத்தனை மாணவர்களுக்கான வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க தொடர்ச்சியா எங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அவங்களது Support கொடுத்திருக்காங்க. அதுதான் ரொம்ப முக்கியம் தோணுது. இந்த நேரத்தில அந்த கல்லூரிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிச்சிக்கிறேன். இங்கே அந்த கல்லூரி பெயர்களை நான் பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன் :

Aarupadai Veedu Institute of Technology Chennai
Alpha Arts & Science College Chennai
Apollo Arts & Science College Chennai
Apollo Hospitals Chennai
Aravind Eye Hospitals Chennai
AVC Polytechnic College Mayiladuthurai
Builders Engineering College Erode
DOT School of Design Chennai
Dr. MGR University Chennai
Einstein Group of Institution Tirunelveli
Hindustan Group of Institution Coimbatore
Kauvery Hospitals Chennai
KG College of Pharmacy and Research Institute Villupuram
Kumaraguru College of Liberal Arts & Kumaraguru College of Technology Coimbatore
MAM Group of Institution Trichy
Dr. MGR Janaki Arts & Science Womens College Chennai
PSNA Engineering of College Dindugal
Rajalakshmi Group of Institutions
Rajalakshmi Engineering College
Rajalakshmi Institute of Technology
Rajalakshmi College of Nursing Chennai
RVS College of Arts and Science Coimbatore
RVS Kumaran Arts & Science College Dindugal
Sri Sairam Engineering of College Chennai
Sankara College of Science and Commerce Coimbatore
Sathyabama Institute of Science and Technology Chennai
Saveetha Engineering College Chennai
SSM College of Engineering Kumarapalayam
Sri Krishna Group of Institution Coimbatore
SRM Institute of Science and Technology Chennai
Vel Tech University Chennai
Vels Institute of Science, Technology and Advanced Studies (Vels University) Chennai
Venkateshwara Hospitals Chennai
Valliammal College for Women, Anna Nagar Chennai
VIT University Vellore
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் அகரம் தன்னார்வலர்களும், முன்னால் மாணவர்களும் எடுக்கக்கூடிய முன்னெடுப்புகள் தான் அகரமுடைய நம்பிக்கையாவும், பிடிப்பாவும் இருக்கு. அதனால் தான் இது ஒரு இயக்கமாக மாறி உள்ளது என்ற உணர்வை ஆழமாக கொடுக்குது.

இதுவரைக்கும் இந்த மாணவர்களும் தன்னார்வலர்களும் சேர்ந்து செய்த செயல்பாடுகள்

1. வழிகாட்டிகள் திட்டம்
2. தைத் திட்டம்
3. இணை திட்டம்
4. ஜவ்வாது மலை பள்ளிகளில் நடக்ககூடிய பெல்லோஷிப்

சமீபமா நடந்த ஒரு பெல்லோஷிப் Training-ல முன்னால் மாணவர்கள் பங்கேற்று இருந்தாங்க. அவங்களோடு கலந்துரையாடும் பொழுது, அவங்கட்ட அகரம் என்பது உங்களுடைய புரிதலில் என்ன என்பதை தெரிந்து கொள்ள கேட்டோம்? அவர்களுடைய பதிலை தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருந்தது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில் சொன்னார்கள். அதில் ஒரு தங்கை சொன்னார் ‘நான் தான் அகரம்’. அப்படின்னா என்ன சொல்ல வர என்று கேட்கும் பொழுது? “நிறைய சவால்; நிறைய பிரச்சனை அப்படின்னு இந்த ரெண்டு வருஷத்துல பல விஷயங்கள் வந்திருக்கு. இந்த இரண்டு வருடமா வேலை செய்வதற்கு தோதனான சூழல் அங்க இல்லை. நிறைய விஷயங்கள் சரியில்லாமல் இருந்தது. பிரச்சனைகளை கண்டு காம்பரமைஸ் பண்ணாம, சுற்றிலும் நடப்பதை கண்டு தளர்ந்து போகாமல், Resilience-வோட எது பெரிசு புரிய வைச்சி எல்லாத்தையும் Face பண்றதுக்கு தைரியம் கொடுத்தது அகரம். அதற்கேற்றவாறு என்னை தயார்ப்படுத்தி தைரியமாகவும் விடாமுயற்சியுடனும் பயணித்து வருகின்றேன் அதனால் தான் அகரம் என்று சொன்னேன்” என்றார். அப்படி சொல்லும் போது தான் இந்த சமுதாயத்திற்கான சரியான மாணவர்களை உருவாக்கி இருக்கோம் அப்படின்னு தோன்றுகிறது. முக்கியமாக இப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குவதற்கு பலருடைய உழைப்பும், சிந்தனையும், விடாமுயற்சியும் அகரம் கூட இருந்து இருக்கு. அவர்கள் எல்லாருக்கும் நிறைய நிறைய நிறைய நிறைய நன்றிகள்.

அதே மாதிரி இந்த வருஷம் விதை திட்டத்தில் தமிழ்நாடு முழுக்க இருக்க மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர் கல்விக்காக வேலை செய்து வருகிறோம். அவர்களை கல்வியை நோக்கி கொண்டு செல்ல செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.இப்படி பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்குவதற்கு அரசு பள்ளிகள்தான் நம்பிக்கையா இருக்கு. அந்த அரசு பள்ளிகள் நன்றாக செயல்படுவதற்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கும் பெற்றோர்கள் கண்டிப்பா அந்தந்த பள்ளியோடு இணையணும் என்கிற வேண்டுகோளை இந்த இடத்தில் வைக்கிறேன். பள்ளி மேலாண்மை குழுவுல கலந்துக்கோங்க. பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகளையும், உங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையும், எதிர்காலத்தையும், செம்மையாக்க பள்ளியோடு இணைஞ்சு வேலை செய்யுங்க.

பள்ளி மேலாண்மை குழு இரண்டு வருடத்திற்கு முன்பு மறு கட்டமைப்பு செய்யப்பட்ட பிறகு களத்தில் இருந்து அகரத்தின் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களோடு பேசும்போது ஏதோ ஒரு இடத்துல பள்ளி மேலாண்மை குழு Strong ஆ வேலை செஞ்சு, கண்டிப்பா ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பதை புரிஞ்சுக்க முடிகிறது. தொடர்ச்சியா அந்த நம்பிக்கையோட நம்ம பள்ளிகளில் பயணிக்க வேண்டியது இருக்கு. கல்வி நம்ம எல்லோருடைய ஒற்றை நம்பிக்கை அந்த மாற்றத்தை எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழ்வதற்கு இங்கே காரணமாக இருந்தது வேலை செஞ்சிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லனும். மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது. இணைந்திருப்போம். அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழா நிகழ்வை சென்னை ஆல்பா கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் சக்திவேல் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் படித்து வரும் விஜயலட்சுமி இருவரும் தொகுத்து வழங்கினர். எம்.ஜி.ஆர். மகளிர் கல்லூரியில் படித்து வரும் மகாலட்சுமி நன்றி கூறினார். பேராசிரியர் கல்யாணி, அகரம் தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

---------------------------

தொடர்புக்கு : 7871279066

STEM (Science, Technology, Engineering, Mathematics)

அகரம் பவுண்டேஷன் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ‘Women in STEM’ International Conclave நிகழ்வை அடிப்படையாக கொண்டு, STEM துறைகளில் உலக அளவிலான முன்னெடுப்புகளை உள்வாங்கி கொண்டு தமிழ்நாட்டின் சூழல் அடிப்படையில் நம் தமிழ் பெண்கள் முன்னிலை பெற சில பரிந்துரைகளை, உருவாக்கி இருக்கிறோம்.

Tags :
Advertisement