For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ரெப்போ வட்டி விகிதம் குறைஞ்சுடுச்சு! யாருக்கு லாபம்?

06:39 PM Feb 07, 2025 IST | admin
ரெப்போ வட்டி விகிதம் குறைஞ்சுடுச்சு  யாருக்கு லாபம்
Advertisement

டந்த டிசம்பர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக பதவியேற்றார் சஞ்சய் மல்ஹோத்ரா. பதவியேற்றப்பின் அவர் தலைமை தாங்கும் முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் மீட்டிங் இன்று நடந்தது.அதில் முக்கிய முடிவாக, ரெப்போ வட்டி விகிதம் 0.25 பாயிண்டுகள் குறைத்து 6.25 என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையக் கூடும்.கடந்த சனிக்கிழமை தாக்கலான பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ரெப்போ வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம்.இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்ட நாளான இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதார மந்தநிலை, மக்களின் வாங்கும் திறன் பாதிப்பு, வேலையின்மை திண்டாட்டம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை இந்தியாவில் நிலவி வரும் இந்தக் காலக்கட்டத்தில், இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் நடுத்தர மக்கள் எப்படி பயனடைவார்கள் என்பதை விசாரித்த போது பொருளாள வல்லுநர்கள் சொன்னது: "தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருப்பது மிகவும் வரவேற்கதக்க விஷயம் ஆகும். இந்த குறைப்பு சிறிய அளவில் இருந்தாலும், இது வீட்டுக்கடன் பெற்றுள்ளவர்களுக்கு நிச்சயம் ஓரளவு உதவியாகத் இருக்கும். வீட்டுக்கடனை ஃப்ளோட்டிங் ரேட்டிங்கில் வாங்கியிருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து இருந்தால், அதை வங்கிகள் உடனடியாக செயல்படுத்தியிருக்கும். ஆனால், இப்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதை வங்கிகள் செயல்படுத்த கொஞ்சம் காலம் எடுக்கும். பெரும்பாலும், இந்த ரெப்போ வட்டி விகித குறைப்பு அடுத்த காலாண்டில் செயல்படுத்தப்படலாம்.

இந்த குறைப்பு நடவடிக்கை கடன் வாங்கியிருப்பவர்களுக்கு நன்மையை கொடுத்தாலும், டெபாசிட் செய்திருப்பவர்களுக்கு அவ்வளவு நன்மையை தராது. ஃபிக்சட் டெபாசிட்டில் கிடைக்கும் வட்டி மூலம் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும். ஆம்...எப்படி கடன் தவணை தொகை குறைகிறதோ; அப்படி எஃப்.டியின் வட்டியும் குறையும். வீட்டுக்கடனை எடுத்துக்கொண்டால், வட்டி விகிதம் தான் குறையும் என்பதில்லை. ஒன்று வட்டி விகிதம் குறையலாம் அல்லது கடனின் கால அளவு குறையலாம்" என்று விளக்கினார்கள்.

மேலும் இது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி,''ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கம். ரிசர்வ் வங்கியின் இந்த அணுகு முறையானது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கும் இடையேயான சமநிலையை பிரதிபலிக்கிறது.மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நுகர்வு அதிகரிப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்து, உள்நாட்டு தேவையை அதிகரிக்கும். பண பற்றாக்குறையிலிருந்து பாதுகாப்பும் அளிப்பதாக இருக்கும்.

Tags :
Advertisement