For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் - ஜூலை முதல் அமல் - - மத்திய உள்துறை அறிவிப்பு

06:14 PM Feb 24, 2024 IST | admin
பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள்   ஜூலை முதல் அமல்     மத்திய உள்துறை அறிவிப்பு
Advertisement

நம் நாட்டில் பல காலமாக நடைமுறையில் இருந்து வரும் பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதை அடுத்து டிஜிட்டல் பதிவு, மின்னஞ்சல், சர்வர் பதிவு, கணினி, ஸ்மார்ட்போன், எஸ்எம்எஸ், இணையதளம் உள்ளிட்டவையும் இனி ஆவணங்களாக செல்லுபடியாகும். கேஸ் டைரி, எஃப்ஐஆர், குற்றப்பத்திரிகை மற்றும் தீர்ப்பு உட்பட அனைத்து பதிவுகளும் இனி டிஜிட்டல் மயமாகும். எலெக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் பதிவுகள் அனைத்தும் காகித பதிவுகளுக்கு இணையான சட்ட மதிப்பைப் பெறும்.

Advertisement

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சி சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் தொடர்பான புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சக்ஷயா ஆகிய நாமகரணங்களில் பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

புதிய சட்டத்தின்படி, கும்பல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும். இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கும்பல் வன்முறை என்பது அருவருப்பான குற்றம். எனவே, கும்பல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்க புதிய சட்டத்தில் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.புதிய சட்டத்தின்படி, விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதை 180 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்த முடியாது. விசாரணை நிலுவையில் இருந்தாலும், நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

45 நாள்களுக்கு மேல் தீர்ப்பை நீதிபதியால் ஒத்திவைக்க முடியாது. ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் குற்ற வழக்குகளில் தடயவியல் நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது., பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்வது கட்டாயம், குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய விதிமுறை ஆகியவை இவற்றில் அறிமுகமாகின்றன.- என்றார். இந்த சட்டம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த புதிய தண்டனைச் சட்டங்கள் குறித்து ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தது அவர்கள் கூற்றுப்படி நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை சுதந்திரங்களை பறிக்கவும், ஜனநாயகத்தை அழிக்கவும் இவை வழிவகை செய்கின்றன! முன்னரே இதற்கு கடுமையான ஆட்சேபனைகள் எதிர்கட்சிகளிடம், சமூகத் தளத்திலும் வெளிப்பட்ட நிலையிலும் கூட நமது அரசியலின் தோற்றத்தை ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்திற்கு மாற்றும் தன்மையுள்ள 12 சட்ட மாற்றங்கள் செய்துள்ளனர். மாற்றுக் கருத்தை முடக்கவும், எதிர்ப்பை மூர்க்கமாக அழிக்கவும், மற்றும் பொது உரையாடலை சாத்தியமற்றதாக ஆக்கவும் இவை வழி வகை செய்கின்றன! இதன் மூலம் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்க மறுக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்குத் தொடுப்பது, சிறையில் அடைப்பது ஆகியவற்றை எளிமைப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement