செயலிழந்த வங்கி கணக்குகளை மீண்டும் திறக்கும் நடைமுறை தளர்வு - ரிசர்வ் பேங்க் தகவல்!
ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த தகவலின்படி, கடந்த பிப்ரவரி 2023 இறுதி நிலவரப்படி, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக செயல்படாத மற்றும் கோரப்படாத டெபாசிட்கள் தொடர்பாக பொதுத்துறை வங்கிகளால் (PSB) ரிசர்வ் வங்கிக்கு சுமார் ₹35,012 கோடி மற்றப்பட்டுள்ளது" என்று பாராளுமன்றத்தில் ஏப்ரல் 3 அன்று மாநில நிதியமைச்சர் பகவத் கரத் எழுத்துப்பூர்வம மாக அறிவித்திருந்தார். இந்த கோரப்படாத டெபாசிட்டுகள், 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் செயல்படாத, 10.24 கோடி கணக்குகளுக்குச் சொந்தமான வைப்புத்தொகைகளைப் பொறுத்ததாகும் என்ற செய்தியை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) 8,086 கோடி ரூபாய் கோரப்படாத டெபாசிட்களுடன் முதலிடத்திலும், பஞ்சாப் நேஷனல் வங்கி 5,340 கோடி ரூபாய் மதிப்பிலான டெபாசிட்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதைத் தொடர்ந்து கனரா வங்கி ₹4,558 கோடியும், பாங்க் ஆப் பரோடா ₹3,904 கோடியும் கோரப்படாத டெபாசிட்களுடன் உள்ளன.
இந்நிலையில் ஏதேதோ காரணங்களாம்செயலிழந்த வங்கி கணக்குகளை மீண்டும் திறக்கும் நடைமுறையை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, நிதி மோசடியை தடுக்க, செயல்படாத கணக்குகளில் இருந்து யாரும் பணம் எடுக்க முடியாத வகையில், விதிமுறைகளும் சற்று கடுமையாக்கப்பட்டுள்ளன. இப்போது செயல்படாத கணக்குகளை மீண்டும் திறக்க, கேஒய்சி (KYC) விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆர்பிஐ (RBI) கூறுகிறது. KYC விவரங்களை வங்கியின் எந்த கிளையில் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். கணக்கு வைத்திருப்பவரின் வேண்டுகோளின் பேரில் வீடியோ வாடிக்கையாளர் அடையாள செயல்முறை (V-CIP) மூலமாகவும் இந்த செயல்முறையை முடிக்க முடியும்.
எந்தவொரு கணக்கையும் மீண்டும் செயல்படுத்துவதற்கு வங்கிகள் (Banks) எந்த கட்டணத்தையும் வசூலிக்க முடியாது. ஒரு கணக்கு செயலிழந்தால் (Dormant Accounts), குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வங்கிகள் அபராதம் விதிக்க முடியாது. வங்கிகள் சேமிப்புக் கணக்கு (Savings Account) செயல்படாமல் இருந்தாலும், வட்டியை தொடர்ந்து செலுத்த வேண்டும். ஒரு வருடமாக எந்தப் பணப் பரிவர்த்தனையும் நடைபெறாத வங்கிக்கணக்குகளைக் (Bank Account) கண்டறிய ஆண்டுதோறும் ஆய்வு நடத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) தனது அறிக்கையில், 'நிதி மோசடி அபாயத்தைக் குறைக்க செயலற்ற கணக்குகளைக் (Inactive Accounts) கண்டறிவது முக்கியம். செயலிழந்த கணக்குகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டவுடன், அவற்றின் மீதான பரிவர்த்தனைகள் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு உயர் மட்டத்தில் கண்காணிக்கப்பட வேண்டும். இது குறித்து வாடிக்கையாளர் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு தெரிய வரக்கூடாது. செயலற்ற கணக்குகள் மூலம் நடக்கும் மோசடிகளை குறைக்க இது உதவும்.' என்று தெரிவித்துள்ளது.