For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

'நான் யார்?' என்பதை உணர்ந்த ரமண மகரிஷி!

06:59 AM Dec 30, 2023 IST | admin
 நான் யார்    என்பதை உணர்ந்த ரமண மகரிஷி
Advertisement

துரைக்குக் கிழக்கே முப்பது மைல் தொலைவிலுள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் நாள் பிறந்தவரிவர். ஆம்.. ஆருத்ரா தரிசனம், சிவபெருமான் பிரபஞ்ச நடனத்தின் அதிபதியான நடராஜராக காட்சியளித்ததை நினைவுகூரும் திருவிழா, தென்னிந்தியாவின் திருச்சுழியில் உள்ள பூமிநாத கோவிலில், டிசம்பர் 29, 1879 அன்று, சிவபெருமானின் அலங்கரிக்கப்பட்ட சின்னம். சம்பிரதாயபூர்வமாக பகல் மற்றும் இரவு வரை தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. டிசம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 1:00 மணிக்கு மீண்டும் கோயிலுக்குள் தெய்வானை நுழைந்தபோது, ​​கோயிலை ஒட்டிய ஒரு வீட்டில் ஆண் குழந்தையின் முதல் அழுகை சத்தம் கேட்டது. அதிர்ஷ்டசாலி பெற்றோர் சுந்தரம் ஐயர் மற்றும் அவரது மனைவி அழகம்மாள். பிறந்த குழந்தை வேங்கடராமன் என்று பெயர் பெற்றது, பின்னர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார்.

Advertisement

வேங்கடராமனின் குழந்தைப் பருவம் மிகவும் சாதாரணமானது. அவர் தனது வயதுடைய மற்றவர்களுடன் வேடிக்கையாகவும் உல்லாசமாகவும் இருந்தார். வெங்கட்ராமன் ஆறு வயதாக இருந்தபோது, ​​அவர் தனது தந்தையின் பழைய சட்ட ஆவணங்களால் படகுகளை உருவாக்கி தண்ணீரில் மிதக்கிறார். தந்தை கண்டித்ததால், சிறுவன் வீட்டை விட்டு வெளியேறினான். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, கோயிலின் பூசாரி தெய்வீக அன்னையின் சிலைக்கு பின்னால் சிறுவன் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தார். குழந்தையாக இருந்தபோதும், உலகத்தால் துன்புறுத்தப்பட்டபோது அவர் தெய்வீக பிரசன்னத்தில் ஆறுதல் தேடினார்.

Advertisement

வேங்கடராமன் திருச்சுழியில் தொடக்கப் பள்ளியை முடித்துவிட்டு மேலும் பள்ளிப்படிப்பிற்காக திண்டுக்கல் சென்றார். பிப்ரவரி 1892 இல், அவரது தந்தை இறந்தார் மற்றும் குடும்பம் உடைந்தது. வெங்கட்ராமன் மற்றும் அவரது மூத்த சகோதரர் மதுரையில் தங்கள் தந்தைவழி மாமா சுப்பியருடன் வசிக்கச் சென்றனர், அதே நேரத்தில் இரண்டு இளைய குழந்தைகள் தாயுடன் இருந்தனர். ஆரம்பத்தில் வெங்கடராமன் ஸ்காட்ஸ் நடுநிலைப் பள்ளியில் பயின்றார், பின்னர் அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

சிறுவன் தனது பள்ளிப் படிப்பை விட நண்பர்களுடன் விளையாடுவதை விரும்பினான். அவர் ஒரு அற்புதமான நினைவாற்றலைக் கொண்டிருந்தார், இது ஒரு முறை படித்த பிறகு பாடத்தை மீண்டும் செய்ய அவருக்கு உதவியது. அந்த நாட்களில் அவரைப் பற்றிய அசாதாரணமான விஷயம் அவரது அசாதாரணமான ஆழ்ந்த தூக்கம். அவரை எழுப்புவது எளிதல்ல என்று அவர் அயர்ந்து தூங்கினார். பகலில் அவருக்கு உடல்ரீதியாக சவால் விடத் துணியாதவர்கள் இரவில் வந்து, படுக்கையில் இருந்து இழுத்துச் சென்று, அவர் உறங்கிக் கொண்டிருக்கும் போதே, மனதுக்கு இணங்க அடிப்பார்கள். மறுநாள் காலையில் இதெல்லாம் அவனுக்குச் செய்தியாக இருக்கும்.

இப்படியான காலக்கட்டத்தில் திருச்சுழி பஞ்சாயத்துத் தலைவராயிருந்த சுந்தரமய்யர் இறந்தபோது ரமணருக்கு வயது பதினொன்று. தந்தையின் மரணம் வாழ்வு, சாவு பற்றிய உண்மையை அவருக்கு உணர்த்தியது.தந்தையின் மறைவுக்குப்பிறகு ரமணர் மதுரையில் இருந்த சித்தப்பா சுப்பையர் வீட்டில் தங்கிப் படித்தார்.

1896 ஜூலை மாதத்தில் ஒருநாள் வீட்டு மாடியில் இருந்தபோது அவரை மரண பயம் கவ்விக் கொண்டது அவர் முழு உணர்வோடு இருந்தாலும் உடல் பிணம் போல் விறைத்துப் போனது. அவருள் ‘நான் என்பது என்ன?’ என்ற கேள்வி எழுந்தது. உடம்பின் செய்கையில் இருந்து வேறுபட்டு இயங்கும் ஓர் ஆற்றல் அது என்று அவர் உணர்ந்தார். அந்த உணர்வு உறுதிப்பட அவருடைய மரணபயம் நீங்கியது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு சாதாரண வாழ்க்கை என்பது அவருக்கு இயலாது போயிற்று. அடிக்கடி அவருக்கு சமாதி அனுபவம் ஏற்பட்டது.

ஒருநாள் சுப்பையரைப் பார்க்க வந்த நண்பரொருவர் தாம் திருவண்ணாமலை சென்று வந்ததையும், அருணாசலேஸ்வரர் மகிமையையும் கூறக் கேட்டார் ரமணர். ரமணர் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்த நண்பர் சொன்னதைக் கேட்டதிலிருந்து அவருக்குப் படிப்பில் நாட்டம் குறைந்தது. அருணாசலேஸ்வரர் அழைப்பு ஸ்ரீரமணருக்கு மனம் முழுவதும் அருணாசல நினைவாயிருந்தது. திருவண்ணாமலையிலிருந்து தமக்கு அழைப்பு வந்ததாய் அவருக்குத் தோன்றியது.

வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு ‘நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவரது உத்தரவின் பேரில் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்து இருக்கிறது. யாரும் இது குறித்து வருந்த வேண்டாம் என்பதே அக்கடிதத்தில் இருந்த செய்தி. தடைகள் பல கடந்து 1896 செப்டம்பர் முதலாம் நாள் அவர் திருவண்ணாமலையை அடைந்தார்.

நேராக கோவில் கருவறைக்குச் சென்று ‘அப்பா, நான் வந்து விட்டேன் என்று தன் வருகையை அறிவித்தார். ஸ்ரீ ரமணரின் ஆன்மிக தியானம் தொடக்கம் சில மாதங்கள் உடலை மறந்து இதயத்தில் மூழ்கி இதய ஆனந்தத்தில் திளைத்தார். முழு மவுனத்தில் இருந்தார். அவ்வப்போது யாரேனும் ஒரு கவளம் உணவை அவருடைய வாயில் திணிப்பார்கள். அவர் உணவிட்டவரையும் அறியார், தாம் உண்டதையும் அறியார். ரமணரைத் தரிசிக்க பக்தர்கள் திரள் திரளாய் வந்தனர். அது அவருடைய தியானத்துக்கு இடையூறாக இருந்தது. அதையடுத்து அவர் பாதாள லிங்கேசுவரர் கோயிலுக்குள் இருந்த குகையில் தியானத்தைத் தொடர்ந்தார். சேஷாத்ரி சுவாமிகள் மூலம் அவரது பெருமை மேலும் பரவலாயிற்று. மீனாட்சி அம்மாள் என்கிற பெண்மணி அவருக்குத் தொண்டு செய்து வந்தார்.

பிற்பாடு ‘குருமூர்த்தம்’, ‘மாந்தோப்பு’ என்று இடம் மாறி நிஷ்டையில் இருந்தார். பல குன்றுகளிலும், குகைகளிலும் தியானம் செய்தார். தனது தாயாரின் அழைப்பை மறுத்த, ரமணரின் இருப்பிடம் தேடி அவரது தாயாரும், மூத்த சகோதரரும் அவரைக் காண வந்தனர். மகான் நிலையில் இருந்தவரைக் கண்டு வியந்தனர். தங்களுடன் ஊருக்கு வரும்படி அழைத்தனர். ஆனால், ரமணர் அவர்களுடைய வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

அவர் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். பின்னாளில் ஆசிரமம் அமைத்து வசித்தபோது அங்கே பக்தர்களுக்கு உணவு சமைக்கும் வேலையிலும் உதவுவார். மிகச் சிக்கனமானவர். சிறு காகிதத் துண்டையும் தூக்கி எறியாமல் ஏதாவது குறிப்புகள் எழுதப் பயன்படுத்துவார். உணவளிப்பார். பறவைகளிடத்தும் விலங்குகளிடத்தும் அன்பு காட்டி, ரமணரின் புகழ் எங்கும் பரவியது. வெளிநாட்டவர் பலரும் அவரைத் தரிசிக்க வந்தார்கள். உள்நாட்டிலும் சிலர் அவருடனேயே சீடர்களாய் தங்கிவிட்டனர். எல்லாருடைய சவுகரித்துக் காகவும்தான் ஆசிரமம் அமைக்கப்பட்டது. தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தீட்சை அளித்தார் ரமணர். ரமணரின் தாயாரும் இளைய சகோதரரும் திருவண்ணாமலைக்கே வந்து விட்டனர். இளையவர் ‘நிரஞ்ஜனானந்த சுவாமிகள்’ என்கிற தீட்சா நாமத்துடன் (ரமணரால் தீட்சையளிக்கப்பெற்று) ஆசி ஆசிரமப் பொறுப்பேற்றார்.1922 மே மாதம் உடல் நலக் குறைவுற்று தாயார் இறந்த போது ரமணர் அவருக்கு ஹஸ்த தீட்சை அளித்து பிறப்பற்ற முக்தி கிடைக்கச் செய்தார். ரமணர் ஆசிரமம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது.

அவருடைய நூல்களை வெளியிட்டு விற்பனை செய்ய ஆசிரமத்தில் ஒரு தனிப் பிரிவே இயங்கி வந்தது.

ஸ்ரீ ரமண மகரிஷி மறைவு

ரமணருக்கு எழுபது வயதானபோது உடம்பில் கட்டிகள் தோன்றின. அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் தொந்தரை நீங்கிய பாடில்லை. அவருடைய எழுபதாவது வயதைக் குறித்து ரமண ஜயந்தி வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டது. சுவாமிகள் தங்களை விட்டுப் போவதை எண்ணி பக்தர்கள் பெருந்துயரத்துக்குள்ளாயினர். அவர் சொன்னார், ‘நான் எங்கே போவேன், இங்குதான் இருப்பேன் என்று. அன்று 16.4.1950 வெள்ளிக்கிழமை இரவு மணி 8.47. பகவான் ரமணர் மகா சமாதி அடைந்தார். அவர் மரணம் அடைந்த அன்று வானில் ஒளிமிக்க விண்மீனாய் அவர் ஆன்மா ஊர்ந்து சென்றது. அருணாசலத்தின் உச்சியை அடைந்து மறைந்தது. அன்று ஆயிரக்கணக்கானவர்கள் அந்த ஜோதியைக் கண்டனர். இன்று ஒவ்வோர் இதயத்திலும் ஒளிவிடும் விளக்காய் அவர் விளங்குகிறார்.

ஆக.. நான் யார்...? - இந்தக் கேள்விக்கு விடை தேடிச் செல்கிறவர்கள் மாமனிதர்கள் போற்றும் மகான்களாகி விடுகின்றனர். நான் யார் தெரியுமா? என்று முண்டாசு தட்டி, மீசையை முறுக்கிக் காட்டுகிறவர்களையே சமூகத்தில் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போய்விட்ட மனிதர்களுக்கு, மாமணிகள் போற்றிய விருதுநகர், திருச்சுழி, வேங்கட ரமணன் என்ற ரமண மகரிஷி நினைவில் நிறுத்தி வணக்கம் சொல்வோம்.🙏

அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement