ரமலான் நோன்பு தொடங்கியது!
முஸ்லிம்களின் மிகப் பிரதானமான வழிபாடு என்றால் அது நோன்பு. ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். இந்த ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கி விட்டது.
அதென்ன ரமலான் நோன்பு... ! `ரமலான் மாதம் இஸ்லாமிய நாள்காட்டியின் படி ஒன்பதாவது மாதம். இந்த மாதத்தை இஸ்லாமியர்கள் புனித மாதங்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள். அவர்களின் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காண்பித்துக் கொடுத்த வழிகாட்டுதலின்படியே இந்த நோன்பை கடைபிடித்து வருகிறார்கள். கி.பி. 624-ம் ஆண்டு இந்த நோன்பு கடமையாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் பிறை பார்த்த மறுநாளிலிருந்து இந்த நோன்பு தொடங்கும்.. இந்த நோன்பை மரியாதைக்குரிய அடையாளமாகவும், தங்களை தூய்மைப்படுத்த அல்லாவின் கருணையை பெறவும் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இந்த நோன்பு என்பது பசியும் தாகமும் மட்டுமல்ல., மாறாக நமது உறுப்புக்களும் நோன்பு நோற்க வேண்டும், இந்த பசியும் தாகமும்தான் மிகவும் அற்புதமான மருந்து. உலகின் பல புரட்சிகளுக்கும் சிந்தனைகளுக்கும் அடித்தளம் இந்த பசி மற்றும் தாகமே.
குறிப்பாக இந்த பசியின் மூலம் கோபம், பொறாமை, காமம், அகக்காரம் என அனைத்தும் மனிதனின் கட்டுப்பாட்டில் வருகின்றது. இந்த பசியின் மூலம் தங்களின் ஏக இறைவனின் நெருக்கத்தை பெறுகிறார்கள்.
இந்த பசியின் மூலம் மனிதன் சுய ஒழுக்கத்தையம் சுய தன்அடக்கத்தையும் பெறுகிறான். இறைவனது அருள்வாசல் வாயிலை பெறுகிறான். அவன் சுற்றத்தார் மத்தியில் கண்ணியம் பெறுகிறான்.
மா மன்னர்கள் முதல் சமூகத்தின் அடித்தட்டு மனிதனும் இந்த பசியை உணர்கிறான். பணக்காரன் ஏழையின் பசியை உணர்கிறான். இது தான் இஸ்லாம் காட்டும் சமத்துவம்.
எனினும் சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் உடைய பெண்கள், நெடுதூரம் பயணம் செய்பவர்கள், நீரிழுவு நோயாளிகள் என சிலர் நோன்பில் இருந்து விலக்கு பெறுகிறார்கள்.
நோன்பு என்பது வெறும் பசித்து இருப்பது அல்ல, மாறாக ஒவ்வரு உடல் உறுப்பிற்கும் நோன்பு உள்ளது உதாரணத்திற்கு வாய் தீயவற்றை பேசாமல் இருக்க வேண்டும் கண் தீயவற்றை பார்க்காமல் இருக்க வேண்டும்.
ஏழையின் பசியை உணர வேண்டும் என்பதற்காக மட்டும் நோன்பு இஸ்லாமியர்களுக்கு கடமையாக்கப்படவில்லை. அப்படி இருந்தால் ஏழைகளுக்கு நோன்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும்.மனிதன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதில் இறைவனுக்கு விருப்பமா என்றால் அதுவும் கிடையாது. நோன்பின் நோக்கம் மனிதன் பக்குவப்பட வேண்டும் என்பதுதான்.
அதே நேரம், நோன்பு வைப்பதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் நமது ஆரோக்கிய வாழ்வுக்கு நலம் தருபவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் வீணான காட்சிகளை பார்க்காமல்,
வீணான பேச்சுகளை செவியேற்க்கமல்,
வீணான பேச்சுகளை பேசாமல்,
வீணான விளையாட்டுக்கில் ஈடுபடாமல்,
கண், காது, வாய், உடல் உறுப்புக்களின் நோன்பு மிக முக்கியமானது.
இல்லாவிட்டால் அது நபி ﷺ அவர்களின் வார்த்தைகளில் அது வெறும் பட்டினியாக ஆகிவிடும்.
ஆக இனிய நம் பாசமிகு நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்! நீங்கள் நோன்பு நோற்கும்போது, உங்கள் இதயம் நன்றியுணர்வு, அமைதி மற்றும் கருணையால் நிரம்பி வழியட்டும்.உங்களைப் பற்றி சிந்திக்கவும், பல்வேறு செயல்களில் ஈடுபடவும், அல்லாஹ்வுடன் இணையவும், குடும்பப் பிணைப்புகளின் ஒற்றுமையைப் போற்றவும் நேரம்! உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமான ரமலான் வாழ்த்துக்கள்!