For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ராமர் கோயில் கும்பாபிஷேகம் : விடுமுறை அளித்துள்ள மாநிலங்களின் பட்டியல் இதோ!

08:29 PM Jan 20, 2024 IST | admin
ராமர் கோயில் கும்பாபிஷேகம்   விடுமுறை அளித்துள்ள மாநிலங்களின் பட்டியல் இதோ
Advertisement

.பி.யில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகளும் தொடங்கி உள்ளன. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்து மத தலைவர்கள், துறவிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350 க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகமே ராமர் கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜனவரி 22ம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதுபோன்று, பல மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களில் பொது விடுமுறை அல்லது அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளன.மேலும், ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு, வரும் திங்கள்கிழமை அனைத்து வங்கிகளும் அரை நாள் மூடப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகள் (PSB), காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் பிற்பகல் 2:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், தற்போது ரிசர்வ் வங்கியும் பங்குச்சந்தைக்கு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் ஜனவரி 22 அன்று விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்களின் பட்டியல்:

☪️உத்தரப்பிரதேசம்: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், மதுக்கடைகளுக்கும் ஜனவரி 22-ம் தேதி விடுமுறை அறிவிப்பு.

☪️குஜராத்: ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவைக் கொண்டாடும் வகையில், ஜனவரி 22-ம் தேதி குஜராத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் அரை நாள் மூடப்படும்.

☪️சத்தீஸ்கர்: அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கள்கிழமை மதியம் 2:30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

☪️மத்திய பிரதேசம்: ஜனவரி 22ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை, அரசு அலுவலகங்கள் மதியம் 2:30 மணி வரை அரை நாள் மூடப்படும். மேலும், மாநிலத்தில் உலர் தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

☪️ஹரியானா: மாநிலத்தில் அனைத்து பள்ளிகளும் விடுமுறை.

☪️ஒடிசா: ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களும் வரும் 22ம் தேதி மதியம் 2:30 மணி வரை அரை நாள் மூடப்பட்டிருக்கும்.

☪️அசாம்: மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

☪️உத்தரகாண்ட்: உத்தரகண்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மதியம் 2:30 மணி வரை அரை நாள் மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அன்றை தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

☪️மகாராஷ்டிரா: மகாராஷ்டிர அரசு, ஜனவரி 22 அன்று மாநிலத்தில் பொது விடுமுறை அறிவித்துள்ளது.

☪️ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அரசு அரை நாள் விடுமுறை.

☪️கோவா: கோவாவில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் ராமர் கோயில் திறப்பு விழா அன்று முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

☪️திரிபுரா: திரிபுரா முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பிற்பகல் 2:30 மணி வரை மூடப்படும் என்று மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

☪️ஹரியானா: அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை.

☪️சண்டிகர்: சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம், அதன் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜனவரி 22 அன்று விடுமுறை அறிவித்துள்ளது.

☪️புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கூட அரைநாள் விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement