தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ரஜினியின் 'வேட்டையன்' படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை எகிறுகிறது !

09:24 PM Oct 12, 2024 IST | admin
Advertisement

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'வேட்டையன்', 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில், புகழ்பெற்ற இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும்  திரையரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அதிக கோரிக்கைகள் எழுந்ததால், இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான மாநிலங்களில் கூடுதல் திரைகள் சேர்க்கப்படுகின்றன.

Advertisement

விறுவிறுப்பான கதை சொல்லல், திறமையான நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பு மற்றும் நேர்த்தியான இயக்கம் மூலம் லட்சக்கணக்கானவர்களின் இதயங்களை கைப்பற்றிய வேட்டையன், வெளியானதிலிருந்து அதிகம் பேசப்படும் படமாக மாறியுள்ளது. முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையிலான ரசிகர்களின் படையெடுப்பால் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அதிக திரையரங்குகளை கோரியதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன.

Advertisement

'வேட்டையன்' வெளியான சில நாட்களில் மிகப்பெரிய பாக்ஸ் ஃஆபிஸ் வெற்றியைப் பெற்று, ரஜினிகாந்தின் பலமான செயல்திறன் மற்றும் த. செ. ஞானவேலின் தலைசிறந்த கதைசொல்லலுக்காக பாராட்டுக்களைப் பெற்றது. படத்தின் உலகளாவிய தரம், ஈர்க்கக்கூடிய அதிரடி காட்சிகள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கருப்பொருள்கள் ஆகியவை மொழியையும் பிராந்திய தடைகளையும் தாண்டி ரசிகர்களின் விருப்பமான படமாக மாறியுள்ளது.

இது குறித்து லைகா புரொடக்ஷன்ஸின் செய்தித் தொடர்பாளர்  கூறுகையில், "வேட்டையன் மீதான அன்பையும் ஆதரவையும் கண்டு நாங்கள் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் உள்ளோம். சூப்பர் ஸ்டாரின் அனைவரையும் ஈர்க்கும் தன்மை, த.செ. ஞானவேலின் இயக்கம் மற்றும் அனிருத்தின் இசை ஆகியவை ஒன்றிணைந்து மற்ற பிராந்தியங்கள் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக பரவி ஒரு தலைசிறந்த சினிமா அனுபவத்தை உருவாக்கியுள்ளது. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விரிவாக்கம் 'ரஜினிகாந்த்' அவர்களின் குறிப்பிடத்தக்க நடிப்பு முதல் த. செ. ஞானவேலின் தொலைநோக்கு பார்வையிலான இயக்கம் வரை மொத்த குழுவின் அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாகும் ".

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 'வேட்டையன்' தனது பாக்ஸ் ஃஆபிஸ் மேலாதிக்கத்தைத் தொடரவும், வெற்றியின் புதிய உச்சங்களை தொடவும் தயாராக உள்ளது. தனித்துவமான சினிமா அனுபவத்திற்கு இத்திரைப்படம் நாட்டை சூறாவளி போல ஆக்கிரமிப்பதற்குள் ரசிகர்கள் மற்றும் சினிமா பார்வையாளர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tags :
RajnikanthVettaiyanரஜினிவேட்டையன்
Advertisement
Next Article