தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ராஜஸ்தான்:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

05:08 PM Sep 19, 2024 IST | admin
Advertisement

ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் இரண்டரை வயது பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது.சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில் போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisement

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து 16 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று காலை 11 மணிக்கு குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

Advertisement

குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்; மீட்பு படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும், ஒட்டு மொத்த கிராமத்தினரும் சேர்ந்து மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது. குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜே.பி.சி. யந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடந்தது.மேலும் குழாய் மூலம் ஆக்சிஜன் சப்ளை கொடுக்கப்பட்டு, கேமரா மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு முதல் அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் 16 மணி நேர போராட்டத்துக்குப் பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
18-Hour Operation2 year-old girlDausa's BandikuiNDRFrajasthanSDRF Teams RescueWho Fell Into Borewell
Advertisement
Next Article