ரெய்ட் / ரெய்டு பட விமர்சனம்!
2018 ஆம் வருஷம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்து வெளிவந்த டகரு ( ராம் என்று பொருள்) படத்தின் ரீமேக் . அன்றைய நிலையில் கன்னடத்தில் மேக்கிங் மற்றும் சிவராஜ்குமார் புகழ் ஆகியவற்றால் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படமது.. நம் தமிழுக்கு கொஞ்சம் ஒவ்வாத இக்கதையை முத்தையாவிடம் அசிஸ்டெண்டாக ஒர்க் செய்த கார்த்தி என்பவரை வைத்து இப்படத்தை வழங்கி சோதித்து விட்டார்.. கொம்பன்', 'மருது' போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு பின்னர் 'ரெய்டு' படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கி இப்படத்துக்கு விஜய் டைப்பில் வசனமெல்லாம் எழுதிக் கொடுத்தும் செல்ஃப் கூட எடுக்காத மனநிலையை வழங்கி விட்டது இந்த ரெய்டு.
படத்தின் கதை என்னவென்று கேட்டால் அப்பா , அம்மா இல்லாமல் அனாதை ஆச்ரமத்தில் வளர்ந்து போலீஸ் ஆபீசரான விக்ரம் பிரபு ரொம்ப நல்லவராம்.. அவர் ரவுடிகளை களை எடுக்கிறார், குறிப்பாக் ரிட்டையர்டு ரவுடி வேலு பிரபாகரனிடம் அடியாட்களாக இருந்த ரிஷி, சவுந்தராஜன் டிரெண்டிங் ரவுடிகளாக வலம் வந்து. ஊரில் அட்டூழியம் செய்யும் அவர்களை பின்னி பெடல் எடுக்கிறார் விக்ரம்பிரபு.இதனால் வழக்கம் போல் வில்லன்கள் வெகுண்டெழுந்து அவரது ஆசைக் காதலி ஸ்ரீ திவ்யா கொன்று விடுகிறார்கள். பிறகென்ன நாயகன் எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் 'ரெய்டு' என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்..
சில வாரம் அல்லது மாசத்துக்கு முன்னால் தனக்கு பொருத்தமான அப்பாவி ஹஸ்பெண்ட ரோலில் வந்து ஸ்கோர் செய்த விக்ரம் பிரபு தனக்கு செட் ஆகாத காக்கி யூனிஃபார்மை மாட்டிக் கொண்டுக் காட்டும் அலப்பறை சகிக்கவில்லை..அதிலும் இண்ட்ரோ சாங்க் எல்லாம் ரொம்ப ஓவர்..சில பல காலம் கழித்து தோன்றி இருக்கும் ஸ்ரீதிவ்யா வும் ஏன் இந்த படத்தில் கமிட் ஆனார் என்பதை ஏதாவது சர்ச்சிலாவது போய் உண்மையைச் சொல்லி பிராயச் சித்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்னொரு ஹீரோயினாக வரும் அனந்திகா, வில்லன் ரிஷி ரித்விக் ஆகியோர் இப்பட வாய்ப்பை உப்புக்கு சப்பாணியாக யூஸ் பண்ணி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. வடிவேலு பாணியில் முறைத்துக் கொண்டே பீர் குடிப்பது, சிகரெட் ஊதுவது மட்டுமே வில்லனா?மேலும் சிட்டு, காக்ரோச், அங்கிள் (பெயரே அதுதான்) என்னும் கேரக்டகர்களில் பலான வில்லன்களாக சௌந்தர்ராஜன், டானி, வேலு பிரபாகரன் ஆகியோர் வாராய்ங்க.. போறாய்ங்க. இவர்களின் நடிப்பு விரைவில் நேம் மாறப் போகும் தொலைக்காட்சிகளில் வரும் க்ரைம் தொடர்களில் போடப்படும் சீரியலை நினைவூட்டுகிறது
கூடவே அபரிதமாக பணம் இருந்தால் இது போன்ற சினிமா எடுப்பதற்குப் பதில் சினிமாவை மட்டுமே நம்பி அலைவோருக்கு அன்றாடம் அன்னதானம் செய்வது நலம் பயக்கும்
மொத்தத்தில் இந்த ரெய்டு - புஸ்வானம்
மார்க் 1.5/5.