தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ராகுலின் பாரத் ஜோடோ யாத்ரா 2.O.. -டிசம்பரில் தொடங்க திட்டம்.?

01:12 PM Nov 08, 2023 IST | admin
Advertisement

ந்திய அரசியலில் தனிக் கவனம் பெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரை முதல் பாகம் கடந்த 2022 செப்டம்பர் 7-ல் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி ஜனவரி 2023-ல் ஸ்ரீநகரில் நிறைவுபெற்றது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தார். மத்தியில் ஆளும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவமின்மை, வேலை வாய்ப்பின்மை போன்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காகவுமே இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருந்த நிலையில் பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பாரத் ஜோடோ யாத்ரா 2.0, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்டம் செப்டம்பர் 7ம் தேதி அன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. ஜனவரி 30ம் தேதி காஷ்மீர் வரை நடைபெற்றது. இந்த யாத்திரையின் போது, 126 நாட்களில் 12 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்கள் வழியாக, சுமார் 4,081 கிலோமீட்டர்கள் ராகுல் காந்தி பயணம் செய்தார். இந்த யாத்திரையில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத் மற்றும் என்சிபியின் சுப்ரியா சூலே போன்ற கட்சித் தலைவர்களும் பல்வேறு நேரங்களில் ராகுல் காந்தியுடன் நடந்தனர். 12 பொதுக் கூட்டங்கள், 100க்கும் மேற்பட்ட தெரு முனை கூட்டங்கள் மற்றும் 13 செய்தியாளர் சந்திப்புகளில் ​​ராகுல் காந்தி உரையாற்றினார்.

Advertisement

தற்போது பாரத் ஜோடோ யாத்ரா 2.0 ஆனது தொடங்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்திய ஒற்றுமை யாத்திரை 2-ஆம் பாகத்தை வரும் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி 2024 வரை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இறுதி முடிவு எட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 2.0 யாத்திரை முழுவதும் நடைபயணமாக இல்லாமல் நடைபயணமும், வாகனப் பயணமும் இணைந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான பி.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பின் போது, காங்கிரஸ் காரியக் கமிட்டியின் (CWC) முதல் கூட்டத்தின் ஆலோசனையில் உரையாற்றினார்.அப்போது பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டவது கட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்த கட்சி பரிசீலித்து வருவதாகவும், இந்த யாத்திரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். ஏனென்றால், முதல் யாத்திரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. .

Tags :
Bharat Jodo Yatra 2.OBharatJodoYatraContinuescongressplanned Decemberrahulyatra
Advertisement
Next Article