For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ராகுலின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு!

07:36 AM Mar 18, 2024 IST | admin
ராகுலின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு
Advertisement

''ஊழலில் ஏகபோக ஆதிக்கத்தை கொண்டுள்ள ஒற்றை மனிதராக பிரதமர் மோடி உள்ளார். தேர்தல் பத்திர விவகாரம், கமிஷன் கொடுப்பது, பணியாதவர்கள் மிரட்டுவது.நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்து போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம்'' என்று மும்பையில் நடைபெற்ற ஒற்றுமை நீதி நடைபயண நிறைவு விழாவில் ராகுல் காந்தி தெரிவித்தார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினக்கூட்டத்தில்`` பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்தது 2 தான். ஒன்று வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது, மற்றொன்று தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வது`` என்றார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு இண்டியா கூட்டணியன் அங்கம் வகிக்கும் பல்வேறு கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்றது.

Advertisement

அக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, ``மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். மக்களின் இதயத்தை புரிந்து கொள்ளவே ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். நாடு முழுவதும் ராகுல்காந்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் பா.ஜ.க.வின் தூக்கம் கலைந்துள்ளது. இந்தியாவிற்கு இப்போது ஒற்றுமை தான் தேவைப்படுகிறது. அதை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார். ராகுல் காந்தியின் போராட்டம் தனி ஒரு மனிதனுக்காகவோ அல்லது காங்கிரஸ்காகவோ இல்லை, அது இந்தியாவிற்கானது.

பா.ஜ.க.வை வீழ்த்துவதிலேயே ராகுல்காந்தியின் வெற்றி அடங்கியுள்ளது. பா.ஜ.க.வால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்கவே ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். குமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பயணம், டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி, கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கிற, அனைத்து தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற அரசை கட்டமைப்பதில் நிறைவடைய வேண்டும். இந்திய கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்தது 2 தான். ஒன்று வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வது, மற்றொன்று தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வது.

இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்; ஆனால் யார் அதை செய்கிறார்கள் என்பது தேர்தல் பத்திர விவகாரத்தில் வெளிப்படையாக தெரிகிறது. தேர்தல் பத்திர நிதி மூலம் பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை இந்தியா கூட்டணி முறியடிக்கும். பா.ஜ.க.வை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு`` என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி பேசிய போது,``“பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணமே வாக்குப்பதிவு இயந்திரம்தான். எங்களிடம் அந்த இயந்திரங்களை காண்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் ஏன் அதனை செய்யவில்லை? ஏனென்றால், பிரதமர் மோடியின் ஆன்மா அதில்தான் உள்ளது. அசல் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றும் பணியை பிரதமர் மோடி சிறப்பாக செய்வார். சீனா அல்லது பாகிஸ்தான் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். ஆனால், அவரோ விளக்கு ஏற்றுங்கள் அல்லது மொபைல் போனை ஆன் செய்யுங்கள் என சொல்வார். நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து என்னை பேச வேண்டாம் என மறைந்த அருண் ஜெட்லி கேட்டுக் கொண்டார். மீறினால் சிறை செல்ல வேண்டி இருக்கும் என தெரிவித்தார்.

ஊழலில் ஏகபோக ஆதிக்கத்தை கொண்டுள்ள ஒற்றை மனிதராக பிரதமர் மோடி உள்ளார். தேர்தல் பத்திர விவகாரம், கமிஷன் கொடுப்பது, பணியாதவர்கள் மிரட்டுவது.
நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்து போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி, வாக்குப்பதிவு இயந்திரம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வசம் உள்ளது. இந்த சக்திக்கு அஞ்சியே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் எதிரணியில் ஐக்கியமாகி உள்ளனர்” என்று பேசினார்.

Tags :
Advertisement