தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ராகுல் காந்தியின் ‘பாரத் நியாய யாத்ரா’மணிப்பூர் டு மும்பை; 6,200 கி.மீ பயணம் ஜனவரி 14இல் தொடக்கம்!

02:37 PM Dec 27, 2023 IST | admin
Advertisement

போன 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த 2023 ஆண்டு ஜனவரி மாதம் தேதி வரை “பாரத் ஜோடோ யாத்ரா” மேற்கொண்ட ராகுல், தற்போது இந்த புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நீதியை வழங்குவதற்காக “பாரத் நியாய யாத்ரா” என்ற பெயரில் இந்த யாத்திரை நடத்தப் படுகிறது. கன்னியாகுமரியில் துவங்கிய “பாரத் ஜோடோ யாத்திரை” காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்தப் பயணத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ராகுல் பயணம் செய்தார். அதே நேரத்தில், “பாரத் நியாய யாத்திரை” வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து தொடங்கி, மேற்கில் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் முடிவடையும். இதன் மூலம் பாரத நியாய யாத்திரையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ராகுல் பயணிக்க உள்ளார். “பாரத நியாய யாத்திரையில்” உள்ள 6200 கி.மீட்டர் பயணத்தின் பெரும்பகுதி பேருந்தில் செல்வார் எனவும், ஆனால் சில இடங்களில் கால்நடை பயணமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாளை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கொண்டாட இருப்பதை முன்னிட்டு டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கேசி வேணுகோபால் ராகுல் காந்தியின் யாத்திரை குறித்த தகவலை வெளிப்படுத்தினார். கேசி வேணுகோபால் பேசுகையில், “ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ நடத்த அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் அனுபவத்துடன் ராகுல் காந்தி தற்போது பாரத் நியாய யாத்திரையை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த யாத்திரை மூலம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுடன் கலந்துரையாட உள்ளார்.

Advertisement

பாரத் ஜோடோ யாத்திரையின் போது 4,500 கி.மீ பயணம் செய்த ராகுல், தற்போது இந்த யாத்திரையில் 6,200 கிமீ தூரம் பயணிக்க உள்ளார். இம்முறை மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார். மொத்தமாக இந்த யாத்திரையின் மூலம் 14 மாநிலங்களுக்கும் அதில் உள்ள 85 மாவட்டங்களுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால் பாரத் ஜோடோ போல் நடைபயணமாக இல்லாமல், இம்முறை பேருந்து மூலம் யாத்திரை நடத்தப்படும். பேருந்து யாத்திரை என்றாலும் நடைப்பயணங்களும் இருக்கும்." இவ்வாறு அறிவித்தார்.

ராகுல் காந்தி முன்னெடுத்த “பாரத் ஜோடோ யாத்திரை” காங்கிரஸ் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் “பாரத நியாய யாத்திரை” மிகவும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
'Bharat Nyaya Yatra'200 km6January 14!journey beginsManipur to MumbaiRahul Gandhi
Advertisement
Next Article