தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கோவை தொழில்நுட்ப கல்லூரியில் ராகிங் - சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது & சஸ்பென்ட்!

05:36 PM Nov 08, 2023 IST | admin
Advertisement

கோவை அவிநாசி சாலையில் இயங்கிவரும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் தங்கி, திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள் சிலர் இவர் தங்கி இருக்கும் விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த முதலாம் ஆண்டு மாணவரை அழைத்துக்கொண்டு சீனியர் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து முதலாம் ஆண்டு மாணவரை அவர்கள் ஆபாசமாக திட்டி தாக்கியதுடன் மொட்டை அடித்தும், உதைத்தும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

அதிலும் மாணவனை அரை நிர்வாணப்படுத்தி. அதனை வீடியோ எடுத்து வைத்து, மது அருந்துவதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதுவும் இரவு முழுவதும் அவரை தாக்கியதாகவும், காலை 5.30 மணி வரை சீனியர் மாணவர்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் அந்த பாதிக்கப்பட்ட மாணவர். திருப்பூரில் இருந்து வந்த பெற்றோர், மாணவரை நேரடியாக பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர். அதோடு கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

இந்த ராகிங் செய்தி வெளியே வந்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டு வேதனையடைந்த பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று ராகிங் சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர், மாணவன் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டு படிக்கும் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகிய 7 மாணவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் கல்லூரி நிர்வாகமும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவனை ராகிங் செய்து கைதான 7 மாணவர்களையும் இடைநீக்கம் செய்துள்ளதாக பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
coimbatoreCollege of TechnologyRagingSenior Students Arrestedsuspended
Advertisement
Next Article