For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ரகு தாத்தா - விமர்சனம்!

07:28 PM Aug 15, 2024 IST | admin
ரகு தாத்தா   விமர்சனம்
Advertisement

மிழ்நாட்டில் பல காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன.அதிலும் இப்படி நடந்த போராட்டங்களில் 70 பேர் வரை இறந்ததாகச் சொல்லப்பட்டாலும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் . அப்படி இருக்கையில் ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்தி திணிப்பு என்ற விஷயத்தை வைத்து இன்று வரை குழப்புகிறார்கள் அரசியல்வாதிகள். இந்த குழப்பம் டைரக்டர் சுமனுக்கும் இருக்கிறது போல. எதிர்பையும், திணிப்பையும் வைத்து குழப்பி உள்ளார். படம் தொடங்கியது முதல் இறுதி வரையிலான காட்சிகள் அனைத்தும் வசனங்களினால் நிரம்பி உள்ளன. இது சல்லிப்படைய செய்கிறது.என்னதான் காமெடி, செண்டிமெண்ட் படமாக ரகு தாத்தா இருந்தாலும் இன்றைய காலகட்டத்திற்கான படமாக ரகு தாத்தா இல்லை

Advertisement

கதை என்னவென்றால் 1960களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட அடாவடியாக பெண்ணியம் நாயகி, கயல்விழி (கீர்த்தி சுரேஷ்). இந்தி திணிப்புக்கு எதிராக போராடி, தன் ஊரில் பிறந்த ஏக்தா சபாவை மூடி சாதித்த அவர், அவ்வூரில் கெத்தாக வலம் வருகிறார். வள்ளுவன் பேட்டை எனும் ஊரில் வங்கி ஒன்றில் அப்பர் டிவிஷன் கிளர்க்காக வேலைப் பார்த்து கொண்டிருக்க்கும் தன்னுடைய தாத்தா எம்.எஸ்.பாஸ்கரால் வளர்க்கப்படுகிறார் . எதிர்பாராத ஒரு சூழலில் எம்.எஸ். பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். தன்னைப் போலவே முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர் என நினைத்து தமிழ் செல்வன் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு மொட்ட கடுதாசி வருகிறது. அது மூலமாக, தான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை ஒரு ஆணாதிக்கவாதி, பிற்போக்கு சிந்தனைகள் நிறைந்தவர் என்கிற உண்மை கீர்த்தி சுரேஷூக்கு தெரிய வருகிறது. இதன் பிறகு கீர்த்தி சுரேஷ் என்ன முடிவெடுக்கிறார்? என்ன களேபரம் நடக்கிறது என்பதுதான் ‘ரகு தாத்தா’.

Advertisement

கீர்த்தி சுரேஷ், ரவீந்திர விஜய் ஆகியோரின் கேரக்டர், இயல்பாக இருக்கிறது. குறிப்பாக வெளியே பகுத்தறிவுவாதியாகவும், உள்ளே பிற்போக்குவாதியாகவும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார் ரவீந்தர். பேருந்தில் பயணம் செய்து கொண்டே காதலை ரவீந்தர் கீர்த்தியிடம் சொல்ல முயற்சிக்கும் காட்சி சிறப்பாக உள்ளது. . தேவதர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர், கூத்து பட்டறை ஜெயக்குமார் இவர்கள் யாரையுமே டைரக்டர் சரியாக பயன்படுத்தவில்லை.அந்த கால ரேடியோ பெட்டி, 1960 களின் வீடுகள் போன்றவை நேர்த்தியாக ஆர்ட் டைரக்டர் உருவாக்கியுள்ளார். கேமராமேன் யாமினி யக்ஞமூர்த்தியின் ஒளிப்பதிவுதான் படத்தின் ஹைலைட். தான் இசையமைக்கும் படங்களில் ஏதேனும் ஒரு பாட்டை ஹிட் ஆக்கிவிடும் ஷான் ரோல்டன் இதில் ஏமாற்றி விட்டார்.

படம் முழுக்க, கீர்த்தி சுரேஷ்க்கு ரிப்பீட்டட் வசனங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பவர்ஃபுல் டயலாக்கும் வெற்றுப் பேச்சாக கலைந்து போய் விடுகிறது. படம் 70களில் எடுக்கப்பட்டது போல பக்காவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் சில காட்சிகளில் “அந்த காலத்தில் இப்படி எல்லாம் இருந்ததா?” என்று நம்மை சிந்திக்க வைக்கிறது. திரைக்கதையில் போதிய் அக்கறைக் காட்டாததால் நல்ல கதையையும் ரசிக்க முடியாதபடி இருக்கிறது. அதாவது இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, பெண்ணியம் பேசும் கீர்த்தி சுரேஷ் தனக்கான வாழ்க்கைத் துணை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாமல் எப்படி அவரைத் தேர்ந்தெடுக்கிறார்? திருமணத்தை நிறுத்த இந்தி கற்றுக்கொள்ள ஏன் கீர்த்தி நினைக்கிறார்? பலவீனமான கிளைமாக்ஸ், முதல் பாதியில் காட்டப்படும் கதை இரண்டாம் பாதியில் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதாக தடம் மாறுவது என பல விஷயங்கள் திரைக்கதையின் மைனஸ். படத்தில் வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ, வார்த்தையோ இல்லை என்பது ஆறுதல்.

மொத்தத்தில் சின்னத்திரையில் வரும் போது பார்க்க தகுந்த  நாடக படமிது

மார்க் 2.5/5

Tags :
Advertisement