தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஆர்டர்…ஆர்டர்!

07:30 PM Sep 04, 2024 IST | admin
Advertisement

புதியதலைமுறை தொலைக்காட்சியில் பிரபல திரைப்பட நடிகை வினோதினி தொகுத்து வழங்கும் சட்டம் பற்றிய மிக சுவாரசியமான நிகழ்ச்சி. இப்படியும் சில வழக்குகளா! என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சி ஆர்டர்… ஆர்டர்….

Advertisement

மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி சுப்ரீம் கோர்ட்  வரை சென்ற மிக வித்தியாசமான வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை சுவாரசிய வழங்குகிறது இந்த நிகழ்ச்சி பிரபல நடிகை வினோதினி தொகுத்து வழங்க வழக்குகளின் போக்குகள் சுவைபட விவரிக்கப்படுகின்றன.

Advertisement

சட்ட நடைமுறைகள் ,நீதிமன்ற விவாதங்கள், திருப்பு முனைகள், என்று அடுக்கான எதிர்பாராத திருப்பங்களுடன் விவரிக்கப்படும் இந்த நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்ற சிறப்பை பெற்றுள்ளது.

சட்டத்தின் பல கோணங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி சட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்துவதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கும் இதன் மறு ஒளிபரப்பு மறுநாள் ஞாயிறு மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

Tags :
'Order Order'Law programputhiyathalaimurai
Advertisement
Next Article